2 தினையளவு' என்னும் பாடலில் _________________________ அணுகுமுறை அமைந்துள்ளது.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks Page61 செய்யுள் 3
TNSCERT Class 8
Answers
Answer:
தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட பனையளவு காட்டும் படிததான்- மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி.
Explanation:
இப்பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் திருவள்ளுவமாலை.திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றும் நூல்.
திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. 53பேர் பாடியுள்ளனர்.இப்பாடலின் ஆசிரியர் கபிலர்.
தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட
வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி
புல்லின் நுனியில் தினை அளவு சிறிதாகத் தேங்கியுள்ள நீர்த்துளி அருகிலுள்ள மிக உயரமான பனைமரத்தை உள்ளடக்கி நிழலாக்கிக் காட்டுவது போலச் சிறிய திருக்குறள் மிகப் பெரிய பொருளை உள்ளடக்கிக் காட்டுகிறது. வீட்டுக்கோழி வள்ளைக் கொடியில் உறங்கும் அளவுக்கு நீர்வளம் மிக்க நாட்டை ஆளும் அரசே! இதை உணர்ந்துகொள்.
கபிலர் - விளக்கம் :
(பொ-ரை) வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.
(அளகு= பறவை; வள்ளை= பெண்கள், நெல் குற்றும்போது பாடும் உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு; வெள்ளை- வெண்பா)
கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம் என்க.
For more related question : https://brainly.in/question/28467835
#SPJ1