2. அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்?
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
அம்பேத்கர் அமைக்க விரும்பிய இந்தியா:
அந்நியர் தளையிலிருந்து விடுபடுவது மட்டுமே விடுதலையன்று, சமூகக் கேடுகளிலிருந்தும் விடுபடுவதே உண்மையான விடுதலை என்பதை உணர்ந்தவர், அம்பேத்கர்.
உண்மையான சுதந்திரம் :
சமுதாயத்தை அரித்துக்கொண்டிருப்பவை மூடநம்பிக்கைகளும் சாதி என்னும் நோயும் ஆகும். சாதி மக்களிடையே ஒருமைப்பாட்டை சீர்குலைத்துவிட்டது என்று அவற்றினை அகற்றிச் சமுதாயத்தைச் சமப்படுத்த விரும்பினார். அவர் வேறுபாடற்ற சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ள மக்கள் சமுதாயத்தைக் கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பினார். அதுவே உண்மையான சுதந்திரம் என்றார்.
ஒடுக்கப்பட்டோர் கையில் இந்திய ஆட்சி :
அம்பேத்கர், 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசுகையில், "மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் ஆளப்படும் மக்களாட்சியை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அது வெறும் எஜமான மாற்றமாய் அமையக்கூடாது; ஒடுக்கப்பட்டோர் கைகளில் அரசியல் அதிகாரம் வரவேண்டும்" என்றார்.
மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி ஏழை மக்களின் கைகளில் அதிகாரம் அமையும் போதுதான், அஃது உண்மையான விடுதலையாய் அமையும் என அம்பேத்கர் கருதினார்.