கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் 20 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதவும்
இந்திய தேசத்தை உலக அரங்கில் மேலும் முன்னேற்ற , நாம் என்ன செய்ய வேண்டும் ?
Answers
Answered by
1
Answer:
நமது இந்தியா_
பாருக்குள்ளே சிறந்த நாடு நமது இந்தியா,
கார்முகிலும் வானிலவும் விரும்பும் இந்தியா;
பேர்ப்படைத்த புகழொளியைப் பெற்ற இந்தியா,
ஊர்க்கூடி உலகோர் யாவரும் வாழ்த்தும் இந்தியா!
எங்கும்வளம் தங்கும் இங்கு எங்கள் இந்தியா,
சிங்கமென சங்கு நாதம் முழங்கும் இந்தியா;
வேற்றுமையை வேரருத்து உயர்ந்த இந்தியா,
ஒற்றுமையை பலமாக்கி வென்ற இந்தியா!
பலமொழி பேசுவோரைப் பெற்ற இந்தியா,
குலங்கள் கோடி கொண்டாலும் காக்கும் இந்தியா;
வீனாச்சமையங்களும் செறிந்ததுதான் எங்கள் இந்தியா,
ஆனாலமைதி ஒன்றை வழங்கிடுமே நமது இந்தியா!
அறிவியலும் கலையியலும் அறிந்த இந்தியா,
பொறியியலும் வானியலும் வளர்க்கும் இந்தியா;
அறிவுப் பெற்ற மானுடரைப் பெற்ற இந்தியா,
குறித்த நாளில் வல்லரசாக்க வாரீர் வீரர்களே!
Similar questions