India Languages, asked by theenadurairaj, 3 months ago

முன்னுகர - சநகிைியால் ஏற்படும் தீகமகள் - தவிர்க்கும் முகற - முடிவுகர.

பின்வரும் குறிப்புககளக் சகாண்டு 200 சசாற்களுக்கு மிகாமல் (இரு பக்க அளவில் )

கட்டுகர எழுதவும்​

Answers

Answered by govarthini80
2

முன்னுரை :

பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நெகிழியால் ஏற்படும் தீகமகள்:

இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது.

தவிர்க்கும் முறை:

தரமான துணிப்பைகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடுவைகள், டப்பாக்களில் அடைத்த குடிநீர், உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 1000-ம் ஆண்டுகள். எனவே பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது. நெகிழிப்பை களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

முடிவுறை:

நம் உடல் நலத்தையும், எதிர்கால சந்ததியினர் நலத்தையும் கருத்தில் கொண்டு இனியாவது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து வளமான, நலமான நோயற்ற சமூகத்திற்கு துணை நிற்போம்.

Similar questions