English, asked by kishore5926, 5 months ago

கிழக்காணும் பத்த
பல்திறன் வினாவிற்கு விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. (3*1=3)
கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது. எரி, பருமல், வங்கு,
கூம்பு பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள்
சிலவாகும் கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எரா எனப்படும்.
கப்பலை உரிய திசையில் செலுத்த பயன்படும் கருவி சுக்கான் எனப்படும்
கப்பல் செலுத்துபவரை மாலுமி, நீகான், கப்பலோட்டி மீகாமன் என்றெல்லாம்
அழைப்பர்
வினாக்கள்
1) இப்பத்தி எதனைப் பற்றியது?
அ) கப்பல்
ஆ) கலங்கரை
கடல்
2) கப்பலின் உறுப்பு எது?
அ) அம்பு
ஆ) கூம்பு
இ) செம்பு
3) கப்பலை செலுத்துபவருக்கு வழங்கும் பெயர்
அ) ஓட்டுநர்
ஆ) நடத்துனர்
இ) மாலுமி
2. கீழக்காணும் பாடல் வரிகளை நன்கு படித்து உணர்ந்து அதனை தொடரும்
பல்திறன் வினாவிற்கு விடையை தேர்ந்தெடுத்து எழுதுக (3*1=3)
வைப்புழிக் கோட்படா வாய்த்தியிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார்
எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன
விச்சைமற்று அல்ல பிற.
லினாக்கள்
1) 'விச்சை' என்ற சொல்லின் பொருள் என்ன?​

Answers

Answered by kripananma20
1

Answer:

Explanation:

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ……..

அ) கலம்

ஆ) வங்கம்

இ) நாவாய்

ஈ) ஓடம்

Answer:

ஈ) ஓடம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.3 தமிழரின் கப்பற்கலை

Question 2.

தொல்காப்பியம் கடற்பயணத்தை …………………….. வழக்கம் என்று கூறுகிறது.

அ) நன்னீ ர்

ஆ) தண்ணீ ர்

இ) முந்நீர்

ஈ) கண்ணீ ர்

Answer:

இ)

முந்நீர்)

Question 3.

கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ……………….

அ) சுக்கான்

ஆ) நங்கூரம்

இ) கண்ண டை

ஈ) சமுக்கு

Answer:

அ) சுக்கான்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.3 தமிழரின் கப்பற்கலை

கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.

கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ……….. …….. என அழைக்கப்படும்.

Answer:

தொகுதி

Question 2.

கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது …

Answer:

நங்கூரம்

Question 3.

இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எனக் குறிப்பிடப்படும்.

Answer:

கண்ணடை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.3 தமிழரின் கப்பற்கலை

பொருத்துக –

1. எரா – திசைகாட்டும் கருவி

2. பருமல் – அடிமரம்

3. மீகாமன் – குறுக்கு மரம்

4. காந்த ஊசி – கப்பலைச் செலுத்துபவர்

Answer:

1. எரா – அடிமரம்

2. பருமல் – குறுக்கு மரம்

3. மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர்

4. காந்த ஊசி – திசைகாட்டும் கருவி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.3 தமிழரின் கப்பற்கலை

தொடர்களில் அமைத்து எழுதுக

1. நீரோட்டம்

கடல் நீரோட்டங்களின் திசையை தமிழர்கள் தம் பட்டறிவால் நன்கு அறிந்திருந்தனர்.

2. காற்றின் திசை

காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

3. வானியல் அறிவு

கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவைப் பெற்றிருந்தனர்.

4. ஏற்றுமதி

பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன.

குறுவினா

Question 1.

தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

Answer:

எடைக் குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டுத்த தோணியாகப் பயன்படுத்தினர் தமிழர்கள்.

உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.

சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் தோணியைப் பயன்படுத்தினர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.3 தமிழரின் கப்பற்கலை

Question 2.

கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் அல்லது பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

Answer:

மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும் போது அவற்றுக்கு இடையே தேங்காய் நார், பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.

சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர்.

இதனால் கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன.

Question 3.

கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

Answer:

கப்பலின் உறுப்புகள் :

கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது.

எரா, பருமல், வங்கு , கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும்.

சிறுவினா

Question 1.

சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.

Answer:

தமிழர்கள் தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றைச் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர்.

கலம், வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை.

இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.3 தமிழரின் கப்பற்கலை

Question 2.

பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.

Answer:

கப்பலைச் செலுத்தும் முறை :

காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

இவ்வுண்மையை வெண்ணிக்குயித்தியார் தம் புறப்பாடலில் குறிப்பிடுகிறார். “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக – வெண்ணிக் குயத்தியார்

கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் தம் பட்டறிவால் நன்கு அறிந்து அவற்றுக்கு ஏற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலைச் செலுத்தினர்.

Similar questions