India Languages, asked by gowrir632, 2 months ago

குாப்பிட்டுள்ளனர்,
3. தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சி குறித்து ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக
(குறிப்பேட்டில் எழுதுக)
இயல் 1
பயிற்சித்தாள் - 3
கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு
விரைவுத் துலங்கல் குறியீடு :
6W4SP4
பாடப்பொருள்​

Answers

Answered by smsenthamizharasi
3

Explanation:

பண்டைக்காலத்தில் தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை .

(ii) அவை காலத்திற்கேற்பப் பல உருவமாற்றத்தைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.

(iii) பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன.

(iv) பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்க்கோடுகளையும், புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்.

(v) சில எழுத்துகளை அழகுப்படுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்து விட்டன

Similar questions