India Languages, asked by rakshikalayoyo505, 2 months ago

சான்று தருக:-3.சொல்லிசை அளபெடை​

Answers

Answered by rajeebsc001
1

Answer:

ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.

நசை என்பது விருப்பம் என்று பொருள்படும். அதையே

நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்றுபொருள் தரும். இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்

தொகை தொகைஇ (தொகுத்து)

வளை வளைஇ (வளைத்து)

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அளவு என்பது அளவுதலைக் குறிக்கும் வினைச்சொல். 'அளவி' என்பது இதன் வினையெச்சம். 'அளவி' என எழுதியிருந்தாலும் செய்யுள் தளை தட்டாது. பொருளும் மாறுபடாது. அப்படி இருக்கும்போது 'அளைஇ' என இங்கு இசைச்சொல்லாக அமைக்கப்பட்டுள்ளது

Similar questions