3.ஒளிச்செறிவின் அளவை அளக்க பயன்படும் கருவி எது? அ) ஒளிமானிஆ) வெப்பமானி இ) பாரமானி ஈ) அளவுகோல்
Answers
Answered by
0
ஒளிச்செறிவின் அளவை அளக்க பயன்படும் கருவி ஒளிமானி ஆகும்.
விளக்கம்:
ஒளிமானி என்பது புறஊதா முதல் அகச்சிவப்பு வரையிலான மின்காந்த கதிர்வீச்சின் திறனை அளவிடும் ஒரு கருவி ஆகும்.
ஒளிமானிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படும். அவை:
- நிழல் ஒளிமானி
- ரிச்சி ஒளிமானி
- பன்சன் எண்ணெய்ப் புள்ளி ஒளிமானி
- லம்மர் புரோடுன் ஒளிமானி
ஒளிமானிகள் பின்வருவனவற்றை அளவிடுகின்றன:
- ஒளிர்வு
- ஒளிவீச்சு
- ஒளி உட்கிரகித்தல்
- சிதறிய கதிர்வீச்சு
- எதிரொளிப்பு
- உடனொளிர்தல்
- நின்றொளிர்தல்
பெரும்பாலான ஒளிமானிகள் ஒளித்தடைகள் அல்லது ஒளிப் பெருக்கிகளைப் பயன்படுத்தி ஒளியை மின்னோட்டமாக மாற்றுகின்றன.
Similar questions