உவமை அணியை - நும் பாடப்பகுதி திருக்குறள் கொண்டு விளக்குக (இயல் - 3) ".
Answers
Answer:
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது ஆகும். ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம்.
புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது 'உவமேயம்' எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்'உவமை' அல்லது 'உவமானம்' எனப்படும். அவ்விரண்டையும் இணைக்கப் பயன்படுவது உவம உருபு ஆகும்.
தொல்காப்பியம் காட்டும் உவமையணி தொடர்புடைய கட்டுரையை தொல்காப்பியம் உவமவியல் செய்திகள் பக்கத்தில் காணலாம்.
12 -ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
“ பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை
”
என்ற நூற்பா விளக்குகிறது. தண்டியலங்காரம் குறிப்பிடும் பொருளணிகள் 35 இல் தலைமை அணியாக உவமை அணி அமைவதாலும் இந்த அணியிலிருந்தே பிற அணிகள் தோன்றுவதாலும் இந்த அணியைத் தாய் அணி என்றும் அழைப்பர் [1]
திருக்குறள்- உவமையணி :
எடுத்துக்காட்டு :
“ வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு
”
விளக்கம் :
செங்கோல் உடைய அரசன் ஒருவன் தன் அதிகாரத்தினைப் பயன்படுத்தி வரி என்ற பெயரில் மக்களிடம் பணம் வசூலிப்பது, வேல் முதலிய ஆயுதங்களைக் கொண்ட ஒரு வழிப்பறி செய்வதற்குச் சமம் ஆகும்.
உவமானம் - வேலொடு நின்றான் இடுஎன்றது.
உவமேயம் - கோலொடு நின்றான் இரவு.
உவம உருபு - போலும்
Answer:
ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம். புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்