தலைப்பிர்க்கு ஏற்ப பெசுதல் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் தலைப்பில் 3 மணித்துளிகல் பேசுக
Answers
Answer:
hi.. I hope it helps you
please mark me as brainliest
இந்த பதிவில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை தொகுப்பை பார்க்கலாம்.
உடல் நலம் தான் அனைத்து செல்வங்களையும் விட உயர்ந்த செல்வமாகும். மற்ற செல்வங்களை பெறவும் பெற்ற செல்வங்களை அனுபவிக்கவும் உடல்நலம் மிக அவசியம்.
தன் சுத்தமும் சுற்றுபுறச் சுத்தமும் நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும்.
அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது கூன் குறுடு செவிடு நீங்கி பிறத்தல் அதனிலும் அரிது” என்று பாடுகிறார் ஒளவையார்.
அவ்வாறே நோய்நொடிகள் இன்றி இக்காலத்தில் வாழ்வது அரிதிலும் அரிதாகி விட்டது. இக்காலத்தில் மனிதன் எவ்வாறு நாகரிக மாற்றத்துக்குள்ளாகி ஆடம்பரமாக வாழ்ந்தாலும் கூட நோயற்ற வாழ்வை வாழமுடியவில்லை.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையென்பது மக்களுடைய பழக்கவழக்கத்தில் தங்கியுள்ளது. “உணவே மருந்து” என்று கூறுவார்கள். நாம் எடுத்து கொள்கின்ற உணவே எம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.
உடலுக்கு கேடு விளைவிக்காத காபோவைதரேற், புரதம், கொழுப்பு, விற்றமின்கள் போன்றன உள்ளடக்கிய நல்ல உணவை எடுத்து கொள்வதால் அநேகமான நோய்களை தடுக்கலாம்.
குறித்த நேரத்தில் உணவுண்ணாமையால் “அல்சர்”, அதிக கொழுப்பு உணவை உண்பதால் “கொலஸ்ரோல்”, அதிக சீனி பண்டங்களால் “நீரிழிவு”, அதிக உப்பால் உயர் குருதியமுக்கம், நஞ்ஞான உணவை உண்பதால் புற்றுநோய் என தவறான உணவு பழக்கங்களாலேயே நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன.
சிக்கியுள்ளது என்னதான் வளர்ச்சி கண்டாலும் மனிதர்கள் ஆரோக்கியமின்றி இறந்து போகிறார்கள். குழந்தைகளும் அடுத்த தலைமுறையும் மோசமான பாதிப்புக்களை எதிர்கொள்ள போகிறது.
ஆகவே நாம் இப்போதாவது விழிப்படைந்து கொள்ள வேண்டும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” என்று கூறுவார்கள்
எனவே நாம் இங்கு ஆரோக்கியமாக வாழ நோயற்ற வாழ்விற்காக இயற்கையை பாதுகாத்து இயற்கை உணவுமுறைகளுக்கு மாறவேண்டும்.
Answer:
https://alltamiltips.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A/