காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன்
வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம்
பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின்
திசைவேகம் காண்க.
அ. 330 மீவி-1 ஆ. 165 மீவி-1
இ. 330 × √2 மீவி-1 ஈ. 320 × √2 மீவி-1
Answers
Answered by
1
330 × √2 மீவி-1
ஒலி அலையின் திசைவேகம்
- ஒலி அலையின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே ஒலியின் திசைவேகம் ஆகும்.
- வாயுவில் ஒலியின் திசைவேகம் ஆனது அதன் வெப்பநிலை இருமடி மூலத்திற்கு நேர்தகவில் உள்ளது.
- காற்றில் ஒலியின் திசை வேகம் 330 மீவி-1 ஆகும். வெப்பநிலை இரட்டிப்பாக்கப்படுவதால், ஒலியின் திசைவேகம் இரண்டின் இருமடி மூலம் அளவிற்கு (√2) அதிகரிக்கும்.
- ஒலியின் திசைவேகம் அழுத்தத்தினை சார்ந்தது அல்ல.
- எனவே அழுத்தம் பாதியாகக் குறைக்கப்படுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது.
- எனவே ஒலியின் திசைவேகம் 330 × √2 மீவி-1 என்பது ஆகும்.
Similar questions