India Languages, asked by gramathilorunaal, 1 day ago

4. தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகார ஈற்றுச்சொல் ​

Answers

Answered by kingofself
1

Answer:

Explanation:

தனிக் குறிலை அடுத்து ‘ஆ’ஈறு வரும் சொற்களைப் பார்த்துவருகிறோம் !

  • பலா + கோடு = பலாஅக் கோடு √  (வேற்றுமைப் புணர்ச்சி)
  • இரா + கொண்டான் = இராக் கொண்டான் √  (வேற்றுமைப் புணர்ச்சி)  - என்பதையும் பார்த்தோம்
  •  நிலா + கொண்டான் = நிலாஅக்  கொண்டன் ×
  •  நிலா + கொண்டான் = நிலாக்  கொண்டன் ×
  •  நிலா + கொண்டான் = நிலாஅத்துக்   கொண்டன் √(அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘அ’ , இடையே வந்ததற்கும் வராததற்கும் சான்றுகள் இவை !

அடுத்து , இதே வகைத் தனிக்குறிலை அடுத்து ‘ஆ’ஈறு வரும் சொற்புணர்ச்சியில் ‘அத்து’இடையே வரும் ஒரு புணர்ச்சி வகை உண்டு எனக் காட்டுகிறார் ! :-  

தனிக் குற்றெழுத்தை அடுத்த ‘ஆ’ஈற்றுச் சொற்களுக்கு விதி வகுத்தபோது, இடையே ‘அ’வரும் என அவர் விதி வகுத்ததைச் சற்றுமுன்தான் பார்த்தோம் !

அஃதாவது-

வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘ஆ’ஈற்றுப் பெயர்ச்சொற் புணர்ச்சியைப் பொறுத்தவரை , நாம் பார்த்துவரும் இந்த நூற்பாவில் (உயிர்மயங். 24) கூறியபடி , தனிக்குறிலை அடுத்த ‘ஆ’ஈற்றுச்சொல்லானது, புணரும்போது ‘அ’ பெற்றதுபோலப் பெறாது , சாரியை பெற்றுப் புணரும் எனச் சான்றுகள் காட்டுகிறார் இளம்பூரணர் !

Similar questions