4. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும்
கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது.
இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ) கணத்தாக்குவிசை ஆ) முடுக்கம்
இ) விசை ஈ) விசை மாற்றவீதம்
Answers
Answered by
4
விசை
நியூட்டனின் இரண்டாம் விதி
- ஒரு பொருளின் மீது செயல்படும் விசை ஆனது அந்த பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர் தகவில் இருக்கும்.
- மேலும் உந்த மாறுபாட்டின் திசை ஆனது விசையின் திசையிலேயே அமையும்.
- நியூட்டனின் இரண்டாவது விதி ஆனது விசையின் எண் மதிப்பினை அளவிட உதவுகிறது.
- இதனாலே நியூட்டனின் இரண்டாம் விதி ஆனது விசையின் விதி என அழைக்கப்படுகிறது.
- நியூட்டனின் இரண்டாம் விதியின் படி விசை F α உந்த மாற்றம் / காலம் ஆகும்.
- எனவே உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது.
- இவ்வரைபட சாய்வின் மதிப்பு விசை ஆகும்.
Similar questions