India Languages, asked by dicknick3108, 24 days ago

நீ கண்டடு களித்த இடம் குறித்து நண்பனுக்கு கடிதம் எழுதுக முகவரி மு. எளங்ஙே எண் 43/2சர்தார் வல்லாபாய் படேல் தெரு சென்னை _ 600054​

Answers

Answered by ItzWhiteStorm
128

Hi there,

here is your answer,

கடிதம்

33,பெரியார் நகர்,

சமத்துவபுரம்,

கோவை.

23.03.2021.

அன்பு நண்பா,

நான் நலம்.உன் நலமறிய ஆவல். உன் குடும்பத்தார் அனைவரின் நலம் அறிய ஆவல்.

நேற்று முன்தினம் நான் கல்விச் சுற்றுலா சென்றிருந்தேன். அது குறித்து உன்னிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேற்று முன்தினம் தஞ்சாவூரிலுள்ள அரண்மனைக்குச் சென்றேன். எழில் பொங்கும் தஞ்சையின் சிறப்புக்கு அரண்மனையும் முக்கியக் காரணம் என அங்கு சென்ற பின்புதான் எனக்கு புரிந்தது. உயர்ந்தோங்கிய அரண்மனையின் உள்ளே அக்காலக் கலைப் பொருட்கள் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு சிலைகள் பல்வேறு காகாலங்கப் பறைசாற்றுகின்றன. சரசுவதி மகால் புத்தக நிலையத்தின் பல்வேறு ஏடுகள், பல்வேறு கால நூல்கள் காணக் கிடைத்திட்ட பல்வேறு செல்வங்கள், நூல்களை சேர்த்து வைத்த சரபோஜி மன்னர் பாராட்டுக்குரியவர்.

அரண்மனைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள்,கட்டுமானப் பணிகள் ,சிறப்பிற்குரியன . அடுக்கடுக்காக அமைக்கப்பட்ட மாடிகளில் ஒன்றில் வைக்கப்பட்ட திமிலங்கத்தின் எலும்பைக்கூட்டை பார்த்து அதிசயித்தேன். அரண்மனையின் உள்சென்று வெளிவரும் வரை நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கோடை விடுமுறையில் நீ இங்கு வந்தால் நாம் மீண்டும் தஞ்சாவூர் சென்று அரண்மனையைச் சுற்றிப் பார்க்கலாம். நீயும் அடுத்த வாரம் செல்லவுள்ள சுற்றுலா குறித்து எனக்கு எழுத வேண்டும்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

உனது பெயர்.

உறைமேல் முகவரி:

பெறுநர்

மு. எளங்ஙே,

43/2 சர்தார் வல்லாபாய் படேல் தெரு,

சென்னை - 600054.

Answered by sushmadhkl
1

Answer:

D99/5

ரஜோரி கார்டன்,

புது தில்லி,

13-09-2022

அன்பு நண்பரே,

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் உங்களுக்கு எல்லாம் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன். நானும் நன்றாக இருக்கிறேன். உங்கள் குடும்பத்தினரை நான் எவ்வளவு மதிக்கிறேன், வணங்குகிறேன் என்பதைத் தெரிவிக்கவும். நீண்ட நாட்களாக நாங்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதவில்லை. எனவே நான் உங்களுக்கு எழுத நினைத்தேன்.

எனது சமீபத்திய டெல்லி பயணத்தைப் பற்றி எழுத காத்திருக்க முடியாது. முந்தைய வாரம் டெல்லிக்கு கற்றல் பயணம் மேற்கொண்டோம். டெல்லி மிகவும் விரிவான கலாச்சார மற்றும் வரலாற்று கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இது முன்னர் "இந்திரபிரஸ்தம்" என்று குறிப்பிடப்பட்டது.

இது முஸ்லீம் பேரரசர்களால் தலைநகராகவும் கருதப்பட்டது. குறிப்பிடத்தக்க வரலாற்று தளங்களில் ஹுமாயூனின் கல்லறை, குதுப்மினார், சப்தர்ஜங் மற்றும் நிஜாமுதீன் கல்லறைகள், ராஷ்டிரபதி பவன், பார்லிமென்ட் ஹவுஸ் போன்றவை அடங்கும். டெல்லியில் ஏராளமான அரசு அலுவலகங்கள், தூதரக கட்டிடங்கள், வர்த்தக நிறுவனங்கள், உயர் கமிஷன்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் தலைநகரான டெல்லி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தளமாகும்.

தங்கள் உண்மையுள்ள

சௌம்

எம். இளஞ்சே எண் 43/2

சர்தார் வல்லபாய் படேல் தெரு

சென்னை _ 600054

Learn more about it:

https://brainly.in/question/7745445

https://brainly.in/question/33201318

#SPJ2

Similar questions