44. நாடும் மொழியும் நமது இரு கண்கள் எனக் கூறியவர்
(A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(B) மகாகவி பாரதியார்
(C) வ.உ. சிதம்பரனார்
(D) இரா.பி. சேதுப்பிள்ளை
Answers
Answered by
15
Answer:
hello everyone
correct option is (c)
Answered by
0
Answer:
நாடும் மொழியும் நமது இரு கண்கள் எனக் கூறியவர் மகாகவி பாரதியார்.
Explanation:
(B)மகாகவி பாரதியார்
- நாட்டின் மீதும் மொழியின் மீதும் மிகுந்த பற்று கொண்ட பாரதியார் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.
- இவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
- இவர் இளமையிலே கவி பாடும் திறன் பெற்றிந்தார் .
- தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவராவார் .
- தம் தாய்மொழி தமிழின் மீது அளவுகடந்த அன்புகொண்டவரான இவர் பிற மொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் பெயர்க்கவும் செய்தார்.
- விடுதலை போராட்டத்தில் இவரின் பங்கு அளப்பரியது.
- விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்தார்.
- இக்காரணத்தால் பாரதியார் தேசியக் கவி என்றும் போற்றப்படுகிறார்.
- "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றும் ,"பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்றும் பாடியவர்.
- குயில் பாட்டு,கண்ணன் பாட்டு,விடுதலைப் பாடல்கள்,பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
- இந்தியாவிலேயே தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் திட்டத்தின் கீழ் முதன்முதலாக நாட்டுடைமையாக்கட்டப் படைப்புகள் பாரதியின் படைப்புகளே.
- கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்ட பாரதியார் மொழியையும் நாட்டையும் தன் இரு கண்கள் போற்றினார்.
Similar questions