English, asked by dsubbulakshmi394, 19 days ago

5) கூற்று 1: செய்யுளில் ஓசையை நிறைவு செய்ய குறில் எழுத்துகள் அளபெடுக்கும்
கூற்று 2 : அளபெடையைக் குறிக்க அவற்றின் பின்னால் குறில் எழுத்துகள்
எழுதப்பெறும்
அ) கூற்று. சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
வில்

Answers

Answered by logeswarianandank
1

அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல்

     

வகைகள்:

செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தினால் அது செய்யுளிசை அளபெடை. இதனை இசைநிறை அளபெடை என்றும் வழங்குவர்.

வினையெச்ச வாய்பாட்டை இசையாக்கி ஒலித்துக் காட்டுவது சொல்லிசை அளபெடை.

இந்த இரு காரணங்களும் இல்லாமல் வெறுமனே இனிய இசைக்காக இசை கூட்டி எழுதுதல் இன்னிசை அளபெடை.

இவற்றை எழுத்துப் பாங்கு நோக்கி

உயிரளபெடை,

ஒற்றளபெடை

என இரண்டாகப் பகுத்துக் காண்பர். 4.3 உயிரளபெடை பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடை இரண்டு வகைப்படும். அவை, 1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை என்பவை ஆகும். நெடில் எழுத்துகளே அளபெடுக்கும். நெடில் எழுத்து அளபெடுக்கும் போது, அந்த நெடில் எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில் எழுதப்படும். செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும். நெடில் எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும். இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும். மாஅயோள் பேஎய்ப் பக்கம் இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில் அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே (நன்னூல் 91) (பொருள்: செய்யுளில் ஓசை குறையும்போது சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் நெடில் எழுத்து நீண்டு ஒலிக்கும். அதற்கு அடையாளமாகக் குறில் எழுத்து எழுதப்படும்.) பொதுவாக, செய்யுளில் ஏற்படும் ஓசைக் குறைவை நிறைவு செய்யவே அளபெடுக்கிறது. எனினும் வேறு காரணங்களுக்காக அளபெடுப்பதும் உண்டு. உயிரளபெடை நான்கு வகைப்படும். 1. இயற்கை அளபெடை 2. சொல்லிசை அளபெடை 3. இன்னிசை அளபெடை 4. செய்யுளிசை அளபெடை.

Similar questions