எழுவாய்,பயனிலை,செயப்படுபொருள் 5 வரிகள்
Answers
Answer:
Explanation:
தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை.
எழுவாய்:
எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'கண்ணன்' எழுவாய் ஆகும்.
செயப்படுபொருள்:
செயப்படுபொருள் என்பது ஒரு வசனத்தில் "யாரை அல்லது எதை, எவற்றை" என்பதின் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'பந்து' செயப்படுபொருள் ஆகும்.
பயனிலை:
தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. "ஒரு வசனத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று)நிலை பயனிலை எனப்படுகிறது". எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் விளையாடினான் பயனிலை ஆகும்.