5. இயற்சொல் எத்தனை வகைப்படும்" அலையாவை
Answers
Answer:
வணக்கம் சகோ
Explanation:
● இயற்சொல் வகைகள்
இயற்சொல் இரண்டு வகைப்படும். அவை,
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்
என்பவை ஆகும்.
● பெயர் இயற்சொல்
கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் பெயர்ச் சொற்களைப் பெயர் இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.
(எ.கா) மரம், மலை, கடல்
இந்தப் பெயர்ச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை பெயர் இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
● வினை இயற்சொல்
கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் வினைச்சொற்களை வினை இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.
(எ.கா) நடந்தான், சிரித்தாள், வந்தது.
இந்த வினைச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே, இவை வினை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன் . நன்றி