India Languages, asked by edison46, 3 months ago

5. எய்துவர் எய்தாப்பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா தேமா பிறப்பு​

Answers

Answered by ravi2303kumar
9

Answer:

அ) "கூவிளம் தேமா மலர்"

Explanation:

"எய்துவர் எய்தாப்பழி"

எய்துவர்  - எய்+துவர் - நேர்+நிறை  = கூவிளம்

எய்தாப்  - எய் + தாப்  - நேர் + நேர் = தேமா

பழி  - பழி - நிறை  = மலர்

=> இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு "கூவிளம் தேமா மலர்"

Answered by sarahssynergy
4

அ) கூவிளம் தேமா மலர்.

  • எய் / துவர் = நேர் / நிரை = கூவிளம்
  • எய் / தாப்   = நேர் / நேர்  = தேமா
  • பழி  = நிரை- மலர்

Explanation:

அலகிடுதல்:

  • சீர்களை அவற்றிலுள்ள அசைகளின் அடிப்படையில் பிரிப்பதே அலகிடுதல் எனப்படுகிறது. ஒரு சீரை அசை பிரிக்கும் போது பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளவும்.
  • மெய்யெழுத்தின் பக்கத்தில் / கோடிடுக.
  • நெடில் பக்கத்தில் /கோடிடுக.
  • இருகுறில் அடுத்து / கோடிடுக
  • ஒற்று, ஆய்தம், அலகு பெறாது எனவே அவற்றை நீக்கிவும் . பின்னர் ஓர் எழுத்து இருப்பின் நேரசை (நேர்) எனவும்.இரண்டு எழுத்துகள் இருப்பின் நிரையசை(நிரை) எனவும் கொள்க.

வாய்பாடு :

ஈரசை வாய்பாடு:

  • நேர் / நேர் =தேமா
  • நிரை / நேர் =புளிமா
  • நேர் / நிரை =கூவிளம்
  • நிரைநிரை=கருவிளம்

மூவசை வாய்பாடு;

  • நேர் / நேர் / நேர்=தேமாங்காய்
  • நிரை / நேர் / நேர்=புளிமாங்காய்
  • நேர் / நிரை / நேர்=கூவிளங்காய்
  • நிரை / நிரை / நேர் =கருவிளங்காய்

ஈற்றசை (கடைசி அசை) வாய்பாடு :

  • நேர்- நாள்
  • நிரை- மலர்
  • நேர்பு-காசு
  • நிரைபு- பிறப்பு.
Similar questions