5. தமிழில் சொல்வளம் பி.பவியும் புதிய சொல்லாக்கத்தின் தேவைகளித்தும் தமிழ் மகதிடே மேவேதகான கொடுப்புகள் ழெங்கள்
Answers
Answer:
குறிப்புச்சட்டம் –
அறிமுகவுரை சொல்வளம் சொல்லாக்கத்திற்கான தேவை நிறைவுரை அறிமுகவுரை: வணக்கம்! அன்னைமொழியே! அழகார்ந்த செந்தமிழே! எனப் போற்றப்படும் தமிழ்மொழி பிறமொழிகளுக்கெல்லாம் தலைச்சிறந்த மொழியாகும். அம்மொழியின் சொல்வளத்தைப் பற்றிக் காண்போம்.
சொல்வளம்:
இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாம்.
ஒருபொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகராதிகளிலும் காணப்படவில்லை .
“பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள்” என்கிறார் கால்டுவெல்.
சொல்லாக்கத்திற்கான தேவை:
சொல்லாக்கத்திற்கான தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.
இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நூல்களைப் புதிய சொல்லாக்கத்துடன் படைத்தல் வேண்டும்.
இலக்கிய மேன்மைக்கும் மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், புதிய சொல்லாக்கம் தேவை.
மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
தமிழின் பெருமையும் மொழியின் சிறப்பும் குன்றாமல் இருக்க தமிழில் புதிய சொல்லாக்கம் தேவை.
உலகின் பிற ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழ்ப்படுத்தி எழுதும் போது பிறமொழி அறியாத தமிழரும்
அவற்றைக் குறித்து அறிந்துகொள்ள முடியும்.
மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி. அதை நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.
மக்களிடையே பரந்த மனப்பான்மையையும், ஆளுமையையும் நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவைப்படுகிறது.
பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருக்க காலத்திற்கேற்ப புதிய கலைச்சொல்லாக்கம் ஏற்படுத்த வேண்டும்.
நிறைவுரை:
மென்மையான தமிழை மேன்மையான தமிழாக்க அறிவியல் தொழில்நுட்பச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழின் பெருமையை உலகிற்குக் கொண்டு செல்வோம்.