6.பூவின் தோற்ற நிலையை குறிப்பிடும் சொல்
Answers
Answer:
அரும்பு-பூவின் தோற்ற நிலை போது-பூ விரியத் தொடங்கும் நிலை மலர்-பூவின் மலர்ந்த நிலை வீ- மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை அரும்பு வகை: அரும்பு-மல்லிகை முல்லை முதலியவற்றின் அரும்பு போல் சிறிதாகவும் கூராகவுமிருப்பதாகும். மொட்டு-அடுக்கு மல்லிகை நந்தியாவட்டம்,முதலியவற்றின் அரும்பு போல் சற்றுப் பெரியதாகவும் மொட்டையாகவும் இருப்பது. முகை-தாமரை சதுரக்கள்ளி முதலியவற்றின் அரும்பு போல் பெரிதாயிருப்பது. பூக் காம்பு வகை ; காம்பு - சிறியது
தண்டு - பருமையும் மென்மையுமுள்ளது நாளம் - உள்துளையுள்ளது
இதழ் வகை ;
அல்லி -அகவிதழ் புல்லி - புறவிதழ் இதழ் - சிறியது மடல் ; பெரியது
Answer:
பூவின் தோற்ற நிலை = அரும்பு
பூ விரியத் தொடங்கும் நிலை = போது
பூவின் மலர்ந்த நிலை = மலர் (அலர்)
மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை = வீ
பூ வாடின நிலை = செம்மல்
Explanation:
- தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும். சான்றாக, தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் அனைத்து நிலைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.
- தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவில் ஏழு படி நிலைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
1.அரும்பு (அரும்பும் அல்லது தோன்றும் நிலை).
2.மொட்டு (மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை).
3.முகை (நறுமணத்துடன் மொட்டானது தனது இதழ்களைச் சிறிய அளவில் விரித்திருக்கும் நிலை).
4.மலர் (பூவானது தனக்கென உரிய முழு நறுமணத்துடன் நறுமுகையில் இருந்து முழுவதுமாகத் தனது இதழ்களை விரித்திருக்கும் நிலை).
5.அலர் (இந்நிலை தான் பூவின் முழுமையான நிலை. இந்நிலையில் மலரானது தனது இதழ்களை முற்றிலுமாக விரித்துப் பூவின் மற்ற நிலைகளைக் காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும்).
6.வீ (பூவானது வாடத் தொடங்கும் நிலை).
7.செம்மல் (பூவானது முற்றிலுமாக வாடிச் சருகாகி உதிரும் நிலை).
பேதை பெதும்பை,மங்கை ,மடந்தை,அரிவை,தெரிவை பேரிளம்பெண், என்று பெண்களுக்கு ஒவ்வொரு நிலையும் இருப்பது போல,பூவுக்கு ஒவ்வொரு நிலை உண்டு.
அரும்பு,போது,மலர்,வீ,செம்மல்
அரும்பு என்பது பூவின் தொடக்க நிலையைக் குறிக்கும்.
போது என்பது பூ மலர்வதுக்கு முன் உள்ள நிலையினைக் குறிக்கும்.
மலர் என்பது பூவின் விரிந்த நிலையினைக் குறிக்கும்.
மலர்ந்த பின் செடியில் இருந்து பூக்கள் உதிரும் நிலையினைக் குறிப்பது வீ .
கீழே உதிர்ந்த பூ மணம் பரப்பிக் கொண்டு இருப்பது செம்மல் எனப்படும்.