India Languages, asked by sriramias007, 5 months ago

6. சங்ககாலப் பெண்பாற் புலவரில் காற்றை வளி என
சிறப்பு​

Answers

Answered by prithika27555
1

தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலம் தமிழ்ப் புலவர்கள் நிறைந்து வழிந்த காலம். அக்காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பதை இலக்கியங்களை ஆராயும்போது தெளிவாகிறது.

பிற்காலத்தில் பெண்பாற் புலவர்களின் பெயர் எவ்வாறு சுட்டப்பட்டதெனின், அவர்கள் எழுதிய இலக்கியங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்தே அவர்களுக்கு பெயர் வைக்கப்பட்டது என்பதே உண்மை.எடுத்துக்காட்டாக செம்புலம் பற்றி ஒரு புலவர் பாடுகிறார். அவர் பெயர் ஆய்வாளர்களால் அறியப்படவில்லை. ஆயினும் கவிதை இரசம் கொட்டுகிறது. எனவே அப்புலவருக்கு செம்புலப்பெயனீரார் என்று பெயர் சூட்டினர்.

சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர்களை சங்ககாலப் புலவர்கள் என்கிறார்கள். இதில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர்.[சான்று தேவை] இந்தப் பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநர் ஆற்றுப்படை, நற்றிணை என்கிற பிரிவில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

Similar questions