சொல்லிலுள்ள எழுத்தின் வகை, அது பிறக்கு
எழுத்துகள்
பிறக்கும் இடம்
7
Answers
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். சொற்களை உருவாக்க இவையே அடிப்படையாக இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்கிறோம்.
• உயிர் எழுத்துகளும் அமைப்பு முறையும்
தமிழில், அடிப்படை ஒலிகளான அ முதல் ஒள வரை உள்ள ஒலிகளை - எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்கிறோம். இவை அமைந்துள்ள முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அ
ஆ
இ
ஈ
உ
ஊ
எ
ஏ
ஐ
ஒ
ஓ
ஒள
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
இந்தப் பன்னிரண்டு எழுத்துகளும் இயல்பாகவும் எளிதாகவும் ஒலிக்கக் கூடியனவாக உள்ளன.
உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்றும் குறிப்பிடுவர். ஆவி என்றால் உயிர் என்று பொருள்.
• மெய் எழுத்துகளும் அமைப்பு முறையும்
உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். க், ங், ச் முதலியன மெய் எழுத்துகள் ஆகும். மெய் எழுத்துகளும் அவை வரிசையில் அமைந்துள்ள முறையும் கீழே தரப்பட்டுள்ளன.
க்
ங்
ச்
ஞ்
ட்
ண்
த்
ந்
ப்
ம்
ய்
ர்
ல்
வ்
ழ்
ள்
ற்
ன்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
இந்த எழுத்துகளை ஒலிப்பது சற்றுக் கடினம். உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல இந்த எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே இயங்கும், அதனால் இவற்றை மெய் எழுத்துகள் என்று கூறுவர். மெய் என்பதும் உடம்பு என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும் கூறுவர். இந்த எழுத்துகள் புள்ளியுடன் இருப்பதால் இவற்றைப் புள்ளி எழுத்து என்றும் கூறுவர். உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
‘உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே’ (59)
என்னும் நன்னூல் நூற்பா இதை விளக்குகிறது.
3.1.2 சார்பு எழுத்துகள்
தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள் மட்டும் அல்லாமல் வேறு சில வகை எழுத்துகளும் உள்ளன. இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில், அவற்றின் கூட்டாக அமைகின்றன. அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து (துணைஎழுத்தாக) நிற்கின்றன. எனவே சார்பு எழுத்துகள் என அழைக்கப் படுகின்றன. உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகள் சார்பு எழுத்துகள் ஆகும்.
Answer:
Busy ho kya ha to Bata do
Mai shinchan dekhne ja rahe ho