Science, asked by kalaisharsh7427, 3 months ago

7.வல்லின உயிர்மெய் எழுத்துகள்
அ)90
ஆ)72
இ)126​

Answers

Answered by riya7776
8

Answer:

1.0 எழுத்தியல்

1.1 உயிர் எழுத்து

 உயிரெழுத்துகள் 12 உள்ளன.

 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

 இவை பிற எழுத்துகளின் துணையின்றி ஒலிக்கக்கூடியவை

 உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரு வகைப்படும்

(i) குறில் எழுத்துகள் (5) – குறுகிய ஓசை உடையவை

(அ, இ, உ, எ, ஒ)

(ii) நெடில் எழுத்துகள் (7) – நெடிய ஓசை உடையவை

(ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)

1.2 மெய் எழுத்து

 மெய் எழுத்துகள் 18 உள்ளன.

 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகும்.

 அவை மூன்று வகைப்படும்

(i) வல்லினம் (6) – வலிய ஒலியுடையவை

(க், ச், ட், த், ப், ற் )

(ii) மெல்லினம் (6) – மென்மையான ஒலியுடையவை

(ங், ஞ், ண், ந், ம், ன்)

(iii) இடையினம் (6) – வல்லினம், மெல்லினம் இரண்டுக்கும்

இடைப்பட்ட ஒலியுடையவை

(ய், ர், ல், வ், ழ், ள்)

1.3 உயிர்மெய் எழுத்து

 உயிர்மெய் எழுத்துகள் 216 உள்ளன.

 உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்வதால் பிறக்கின்ற எழுத்துகளே

உயிர்மெய் எழுத்துகளாகும்.

எ.கா : க் + அ = க

(மெய்) (உயிர்) (உயிர்மெய் எழுத்து)

ச் + ஊ = சூ

(மெய்) (உயிர்) (உயிர்மெய் எழுத்து)

 உயிர்மெய் எழுத்துகளின் வகைகள்.

வல்லின உயிர்மெய் எழுத்துகள் : 72 எழுத்துகள்

மெல்லின உயிர்மெய் எழுத்துகள் : 72 எழுத்துகள் 216 எழுத்துகள்

இடையின உயிர்மெய் எழுத்துகள் : 72 எழுத்துகள்

 உயிர்மெய் குறில் : 5 X 18 = 90 எழுத்துகள்

எ.கா : க் + உ = கு

த் + ஒ = தொ

 உயிர்மெய் நெடில் : 7 X 18 = 126 எழுத்துகள்

எ.கா : க் + ஊ = கூ

த் + ஓ = தோ

1.4 ஆய்த எழுத்து

 மூன்று புள்ளிகளைக் கொண்ட எழுத்து வடிவம் ( ஃ )

எ. கா. எஃ கு, அஃ து

1.5 தமிழ் நெடுங்கணக்கு

உயிர் எழுத்து 12

மெய் எழுத்து 18

உயிர்மெய் எழுத்து 216

ஆய்த எழுத்து 1

___

மொத்தம் 247

1.6 கிரந்த எழுத்துகள்

 சமஸ்கிருத ஒலிகளை எழுதுவதற்குத் தமிழில் உருவாக்கப்பட்ட எழுத்துகள் கிரந்த எழுத்துகள் எனப்படும்.

 ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ, க்ஷ ஆகிய ஆறும் கிரந்த எழுத்துகள்.

எ.கா : ஸர்ப்பம், புஷ்பம், ஹஜி, ஜமாலுடின், பத்து காஜா,

டத்தோ ஸ்ரீ, பக்ஷி.

Answered by pandichellam6060
0

Answer:

க,ச,ட,த,ப,ர

I hope it will help you

Similar questions