8 ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் _______ ஆவார். அ) ஹஜ்ஜஜ் ஆ) முகமது பின் காஸிம் இ) ஜெய சிம்ஹ ஈ) தாகிர்
Answers
Answered by
0
தாகிர்
- ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ் பின் யூசஃப், கலிபாவின் அனுமதியோடு 6000 வலுவான குதிரைப் படை, போர்த் தளவாடங்களைச் சுமந்துவந்த ஒரு பெரிய ஒட்டகப் படை ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான இராணுவத்தினை 17 வயது நிரம்பிய தன் மருமகன் முகமது பின் காசிம் தலைமையில் சிந்து அரசர் தாகிருக்கு எதிராக போரிட அனுப்பி வைத்தார்.
- தாகிர் ஆட்சி செய்த பகுதியான பிராமணாபாத்தில் இராணுவம் உள்ளிட்ட நிர்வாகப் பிரிவுகளில் பிராமணர்களே இருந்தனர்.
- முகமது பின் காசிம் தாகிரை எதிர்த்து போரிட வரும் சமயத்தில் அரசர் மற்றும் முதன்மை அமைச்சர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், படையின் ஒரு பகுதியை விலக்கி முதன்மை அமைச்சர் அரசருக்கு துரோகம் இழைத்தார்.
- மக்களும் தாகிரின் மீது அதிருப்தியில் இருந்தனர்.
- இதனால் முகமது பின் காசிம் தாகிரை வென்று எளிதாக பிராமணாபாத்தை கைப்பற்றினார்.
Similar questions