English, asked by vennilahd, 4 months ago

8. சங்க காலத்திலிருந்த நால்வகைப் படை பற்றி எழுதுக.
விடை:
23​

Answers

Answered by Rakshitaa007
1

Answer:

பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்

  1. பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்பல்தரப் படைகள்
  2. பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்பல்தரப் படைகள்இருநிலைப் படை
  3. பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்பல்தரப் படைகள்இருநிலைப் படைநான்கு வகைப் படை
  4. பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்பல்தரப் படைகள்இருநிலைப் படைநான்கு வகைப் படைநான்கு வகுப்புப் படை
  5. பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்பல்தரப் படைகள்இருநிலைப் படைநான்கு வகைப் படைநான்கு வகுப்புப் படைஐந்து உறுப்புப் படை

பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்பல்தரப் படைகள்இருநிலைப் படைநான்கு வகைப் படைநான்கு வகுப்புப் படைஐந்து உறுப்புப் படை-என்று அதன் தரம், நிலை, வகை, வகுப்பு, உறுப்பு என்கிற பிரிவுகளின் கீழ் பிரிக்கப் பட்டிருந்தது.

பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்பல்தரப் படைகள்இருநிலைப் படைநான்கு வகைப் படைநான்கு வகுப்புப் படைஐந்து உறுப்புப் படை-என்று அதன் தரம், நிலை, வகை, வகுப்பு, உறுப்பு என்கிற பிரிவுகளின் கீழ் பிரிக்கப் பட்டிருந்தது.இவை தவிர பண்டையப் படைகளை அதன் அடக்கத்தைக் கொண்டு

Answered by mspmsp093
0

Answer:

அரசனுக்கு இருக்கவேண்டிய அங்கங்கள் ஆறினுள் முதலாவதாகக் கூறப் படுவது படை. பிற ஐந்து-குடிமை, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை. எனவே தமிழக மன்னர் யாவரும் படை வைத்திருந்தனர் என்பதை உணரலாம். யானை குதிரை தேர் காலாள் என்னும் நால்வகைப்படைகளோடு கப்பற்படையும் இருந்தது. சங்ககாலத்திலிருந்தே இந்தியாவில் தமிழ் மக்கள் மட்டுமே கப்பற்படை வைத்திருந்தனர்.

யானைப்படை மிக இன்றியமையாத ஒன்று. ஆனால் முன்னணிப்படையில் பயன்படுவதில்லை. பின்னால் சென்று எதிரிகளைப் பெரிய எண்ணிக்கையில் அழிக்கவும், அரண்களை உடைக்கவும் யானைகளே உதவும். அரசனும் முதன்மையான படைத் தலைவர்களும் யானைமீது சென்றனர். எண்பேராயத்தின் உறுப்பினர்களில் ஒருவர் யானை வீரர். இவரை யானைப்படைத் தலைவர் எனக்கருதமுடியும். யானைகளுக்கு மதுவூட்டி வெறியேற்றி அழைத்துச் சென்றனர். வலிமை மிக்க கோட்டை வாயில்களைத் தாக்கி உடைப்பதற்கு யானைகளைப் பயன்படுத்தினர்.

குதிரைப்படை விரைந்து தாக்குவதற்குரியது. எனவே முன்னணிப்போரில் அதன் பயன் மிகப் பெரிது. எண்பேராயத்தின் உறுப்பினர்களில் இன்னொருவர் இவுளிமறவர். இவரைக் குதிரைப்படைத் தலைவர் எனக் கருதலாம். போருக்கான குதிரைகள் எப்போதுமே அரபு நாட்டிலிருந்துதான் நம் நாட்டிற்கு இறக்குமதியாயின. பாண்டிய அரசன் 4000 குதிரை வீரர்களை வைத்திருந்ததாக மெகஸ்தனிஸ் (கி.மு.4ஆம் நூற்றாண்டு) கூறுகின்றார். ஆனால் அக்காலத்தில் குதிரைகளுக்கு இலாடம் அடித்துப் பயன்படுத்தாமையால் ஏராளமான குதிரைகள் விரைவில் இறந்துவிட்டன என்றும் தமிழர்களுக்குக் குதிரைகளைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றும் வாசப் கூறுகிறார்.

தேர்ப்படையும் பழங்கால மன்னர்களுக்கு உண்டு. உருவப் பஃறேர் இளஞ் சேட் சென்னி என்ற சோழன் பல அழகிய தேர்களை உடையவன் என்று அவன் பெயரிலிருந்தே தெரிகிறது. அக்காலத்தில் தேர்செய்யும் தச்சர்கள் சிறப்பாக மன்ன னால் பணியமர்த்தப் பட்டிருந்தனர். தேர்கள் குதிரைகளால் இழுக்கப்பட்டன.

காலாட்படையில் மறவர், எயினர், வேடர், மழவர், மள்ளர், பரதவர், மலையர், ஒளியர், கோசர் போன்ற பல இன வீரர்கள் இருந்தனர். யவனர்களும் படைவீரர்களாகப் பணியாற்றினர். மழவர்கள் அடிக்கின்ற கோலுக்கு அஞ்சாது மேன்மேலும் சீறிவருகின்ற நாகம் போல அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் என்று இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன. முன்னணிப்படைப் பிரிவு தூசிப்படை எனப்பட் டது. இறுதியாக வரும் படை கூழை எனப்பட்டது.

கடல் வாணிகத்திற்குப் பாதுகாப்பளிக்கவும், கடற் கொள்ளைக்காரர்களை அழிக்கவும் கப்பற்படை பயன்பட்டது. கரிகாலன் இலங்கைமீது படையெடுத்துச் சென்று கைதிகளைப் பிடித்துவந்ததற்குக் காரணம், அவனிடம் வலிமைமிக்க கப்பற் படை இருந்தமையே. கடல் அரண் அமைத்து கடற்கொள்ளையில் ஈடுபட்ட கடம்பர் களை ஒழித்துக் ‘கடல்பிறக்கோட்டிய’ என்னும் சிறப்புப்பெற்றான் சேரஅரசன் செங்குட்டுவன்.

வேல், வாள், வில், அம்பு, கோல் ஆகியவை சங்ககாலப் படைக்கலங்கள். வேலும் வாளும் எஃகினால் செய்யப்பட்டதால் எஃகம் எனப்பட்டன. வேல்வடித்துத் தருவதற்கெனக் கொல்லர்கள் இருந்தனர். வாள் தகுந்த உறைகளில் இடப்பட் டிருந்தது. மன்னனின் வாள் நுண்ணிய அழகிய வேலைப்பாடுகளையும் விலை யுயர்ந்த கற்களையும் உடையதாயிருந்தது. அம்பு அறாத் தூணியில் அம்புகள் வைக் கப்பட்டிருந்தன. சுற்றி எறியவல்ல கனமான திகிரி (சக்கரம்), கவண் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.

கொல்லிமலைத் தலைவன் ஓரி, அம்பு எய்வதில் வல்லவனாதலின் வல்வில் ஓரி எனப்பட்டான். பலவேல்களை ஒருங்கே வீசுவதில் வல்லவனாதலின் பெரு விறற்கிள்ளி என்ற சோழ அரசன் பல்வேல் தடக்கை என்ற சிறப்புப் பெற்றிருந்தான்.

மேற்கூறப்பட்ட ஆயுதங்களைச் சமாளிக்கத்தக்க கேடயங்கள் இருந்தன. அவை இரும்பினாலும் தோலினாலும் செய்யப்பட்டன. உடலில் போர்த்திக் கொள் ளும் கவசமும் இருந்தது.

போர் நடவடிக்கைகள்:

போரைத் தொடங்குவதெனத் தீர்மானித்தவுடன் படைக்கான போர்வீரர் களைத் திரட்டுவதற்குத் தூதுவர்களை அனுப்புவது வழக்கம் ஆகலாம். சிலப்பதிகாரம் முதலிய பிற்கால இலக்கியங்கள் இதனைக் குறிப்பிடுகின்றன. மறவர், எயினர், மழவர் போன்றவர்கள் போரில் சேர்ந்தனர். படை புறப்படுவதற்கு முன் நன்னிமித்தங்கள் பார்க்கப்பட்டன. படை புறப்படுவதற்கு முன்னர் நல்ல நாளில் வாளைப் புனித நீராட்டி குடை முரசு ஆகியவற்றுடன் அணிவகுப்பு நடத்தினர். இதனை நாட்கோள் என அழைத்தனர். மன்னர்கள் தங்கள் மரபிற்குரிய மாலை களைச் சூடினர். மன்னனின் வெண்கொற்றக் குடையும், கொடியும், முரசும் முன் கொண்டுசெல்லப்பட்டன. கொற்றவைபோன்ற போர்க்கடவுளரின் அருளை வேண் டினர். முரசுகள் ஒலித்தன.

Similar questions