அணுஎண் 83 க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் அணுக்கரு இணைவிற்கு உட்படும்.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
விளக்கம்
கதிரியக்கம்
- சில தனிமங்களின் நிலைப்புத் தன்மையற்ற உட்கருக்கள் சிதைவடைந்து சற்று அதிக நிலைப்புத் தன்மை உடைய உட்கருக்களாக மாறுகின்றன.
- இந்த நிகழ்விற்கு கதிரியக்கம் என்று பெயர்.
இயற்கைக் கதிரியக்கம்
- புறத்தூண்டல் இல்லாமல் சில தனிமங்கள் தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடும் நிகழ்வு இயற்கைக் கதிரியக்கம் என அழைக்கப்படுகிறது.
- அணு எண் 83ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் புறத்தூண்டல் இல்லாமல் தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடும் திறன் பெற்றவை ஆகும்.
- மேலும் இவை அணுக்கரு பிளவு வினைக்கும் உட்படுகின்றன.
- எ.கா. யுரேனியம், ரேடியம் முதலியன.
- அணு எண் 83ஐ விட குறைவாக உள்ள தனிமங்களில் டெக்னிட்டியம் மற்றும் புரோமித்தியம் ஆகிய இரண்டு தனிமங்கள் மட்டுமே கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago