தமிழ் கூறும் அழகு
9
7
8
4
Answers
Answered by
0
Answer:
பத்து அழகுகள்
பத்து அழகுகள் என்பவை ஒரு நூலை அலங்கரிப்பதற்கு அந்நூலில் இருக்கவேண்டிய பத்துவகை அழகுகள் யாவை என்பதை நன்னூல் கூறுகிறது.
கூறவந்த பொருளைச் சொற்கள் விரியாமல் சுருக்கமாகக் கூறவேண்டும்.
சுருக்கமாகச் சொன்னாலும் பொருளைத் தெளிவாக விளங்க வைக்க வேண்டும்.
படிப்பவருக்கு இனிமை தரும்படி சொல்ல வேண்டும்.
நூலில் நல்ல சொற்களைச் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
சந்த இன்பம் இருக்குமாறு நூலை அமைக்க வேண்டும்.
ஆழ்ந்த கருத்துகள் உடையதாக நூல் இருக்க வேண்டும்.
கூறும் கருத்துகளைக் காரண காரிய முறைப்படி தொகுத்துக் கூறவேண்டும்.
உயர்ந்தோர் கருத்தோடு மாறுபடாமல் கூறவேண்டும்.
மிகச்சிறந்த பொருளைத் தருகின்ற நூலாக அது இருக்கவேண்டும்.
கூறவந்த பொருளை விளக்க ஆங்காங்கே எடுத்துக்காட்டுகள் தரப்படவேண்டும், ஆகிய பத்தும் நூலுக்கு இருக்கவேண்டிய அழகுகள் என்று நன்னூல் கூறுகிறது.
Similar questions