அறிக (A) - சிறுகுடலைப் போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன. காரணம் (R) - நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றன. அ) A மற்றும் R ஆகியன சரி. மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் ஆகும். ஆ) A மறறும் R ஆகியன சரி. மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் இல்லை. இ) A சரி ஆனால் R தவறு ஈ) A தவறு ஆனால் R சரி.
Answers
Answered by
0
A தவறு ஆனால் R சரி
பெருங்குடல்
- பெருங்குடலில் பிதுக்கப் பகுதி, பெருங்குடல் பகுதி மற்றும் மலக்குடல் ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன.
- குடல் பிதுக்கப் பகுதி மற்றும் குடல் வால் பகுதி ஆனது தாவர உண்ணிகளில் மிகப் பெரியதாக அமைந்து உள்ளது.
- பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செல்லுலோஸ் செரித்தலுக்கு உதவுகின்றன.
- கோலன் என்ற பெருங்குடல் ஆனது ஏறு குடல், கிடைமட்டக் குடல், இறங்கு குடல் மற்றும் சிக்மாய்டு குடல் ஆகிய நான்கு பகுதிகளை கொண்டு உள்ளது.
- பெருங்குடலில் உறிஞ்சிகள் கிடையாது.
- எனினும் பெருங்குடல் ஆனது அதிக அளவு நீர் வைட்டமின்கள், சில தாது உப்புகள் மற்றும் சில மருந்துப் பொருட்கள் ஆகியவை உட்கிரகித்தலில் ஈடுபடுகின்றது.
- எனவே A தவறு ஆனால் R சரி ஆகும்.
Attachments:
Similar questions