about covid-19
letter in Tamil
Answers
Answer:
கோவிட்-19 பெருந்தொற்று என்பது கடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS‑ CoV‑ 2) என்ற தீநுண்மி காரணமாக ஏற்படும் கொரோனாவைரஸ் நோயின் (கோவிட்‑19) பெருந்தொற்றாகும்.இது கொரோனாவைரஸ் பெருந்தொற்று என்றும் அறியப்படுகிறது. இந்நோயின் தொற்று முதன்முதலில் சீனாவின் ஊகானில் 2019 திசம்பரில் அடையாளம் காணப்பட்டது.சனவரி 30 அன்று கோவிட்-19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவும், மார்ச் 11 அன்று ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.7 ஏப்ரல் 2021 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 13,23,00,599பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 28,71,781 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7,51,26,206பேர் மீண்டு வந்துள்ளனர்.
Answer:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை முகலிவாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயின்று வரும் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
COrona in Chennai
அதாவது, தனக்கு கொரோனா வைரஸ் பாதித்த அறிகுறி இருப்பதாக ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது எளிதில் பரவக்கூடிய வைரஸ்.
எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருக்கின்றன. மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுத்துக் கொள்கிறேன். முன்னதாக சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
என்னுடைய விடுப்பு நாட்களை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் இந்த கடிதத்தை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளான். இந்நிலையில் மாணவனின் கடிதம் வைரலாகி இருக்கிறது.
இப்படி கேட்டால் என்ன செய்வது? இத்தாலி விமான நிலையத்தில் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
இதையறிந்த பள்ளி நிர்வாகம் மாணவனின் பெற்றோரை அழைத்து பேசியது. அதில், மாணவன் விளையாட்டாக கடிதம் எழுதியது தெரியவந்தது. அந்த மாணவனுடன் படிக்கும் சக மாணவர்கள் இவ்வாறு கடிதம் எழுதுமாறு கூறியிருக்கின்றனர்.