Social Sciences, asked by akupj1384, 8 months ago

About Gandhi ji 1000 words in tamil

Answers

Answered by riyaz6595
4

Answer:

Gandhi

காந்தி கல்வி மற்றும் திருமணம் :

காந்தி அடிகள் தனது பள்ளி படிப்பில் திறமையான மாணவராகவே விளங்கினார். மேலும் அவர் தனது 18ஆவது வயதில் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து சென்று தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டார். பிறகு இங்கிலாந்தில் பட்டம் பெற்ற காந்தி இந்திய திரும்பினார்.

அதனை தொடர்ந்து மும்பையில் சில காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். காந்தி அவர்கள் பள்ளி பருவத்திலேயே தனது 13ஆம் வயதிலேயே கஸ்தூரிபாய் என்பவரை மணந்து கொண்டார். இதனை அடுத்து அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

காந்தியின் மனைவி – கஸ்தூரி பாய்

தென்னாபிரிக்க மண்ணில் சத்தியாகிரகம் :

மும்பை மற்றும் ராஜ்கோட்டில் சிறிது காலம் பணியாற்றிய அவர் தனது நண்பர் ஒருவரின் மூலம் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் வேலைக்காக சென்றார். அப்போது ஒருமுறை அவர் நீதிமன்றத்தில் வாதாட தலைப்பாகையோடு சென்றார். அங்கிருந்த நீதிபதி அவரை தலைப்பாகை அணிந்திருந்த காரணத்தினால் வாதாட அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் ஒரு முறை ரயிலில் பயணிக்கும் போது முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறினார். ஆனால், அங்கிருந்த அதிகாரி அவரை அந்த முதல் வகுப்பில் பயணிக்க அனுமதிக்கவில்லை. காரணம், அவர் வெள்ளைக்காரர் இல்லை என்பதால் அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை.

இதனால் தொடர்ந்து அவமானத்தினை சந்தித்த காந்தி அங்குள்ள மக்களின் அதாவது கறுப்பின மக்கள் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் நிலைமையினை நினைத்து வருந்தினார். இது போன்ற நிகழ்வுகளே காந்திக்கு அரசியலில் ஈடுபாடு வரக்காரணமாக அமைந்தது.

பிறகு முதல் முறையாக ஜோகனஸ்பர்க் நகரில் மக்களின் குரலாக அவர் அகிம்சை முறையில் சத்தியாகிரகத்தினை வெற்றிகரமாக நடத்தினார். அப்போதிலிருந்து அகிம்சை வழியில் போராடுவதை தனது யுக்தியாக கையாண்டார் காந்தி.

கதர் உடையின் பின்னணி :

உப்பு சத்தியாகிரகம்:

காந்தியடிகள் நடத்திய பல அறவழி போராட்டங்களில் உப்பு சத்தியாகிரகம் மிகுந்த சிறப்பினை பெற்ற ஒரு போராட்டமாகும். 1930ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவில் இந்தியர்கள் தயாரிக்கும் உப்பிற்கு வரியினை கட்டச்சொன்னது இதனை கண்ட காந்தி மக்களை ஒன்று திரட்டி பெரும் மக்கள் கூட்டத்துடன் அகமதாபாத்தில் இருந்து 23 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு தண்டியை அடைந்தார்.

அங்கு அகிம்சை வழியில் தனது போராட்டத்தினை அவர் நடத்த துவங்கினார். இதனால் ஆங்கிலேயர்களால் பலர் சிறை சென்றனர். ஆனால், மக்களின் கூட்டம் குறையவில்லை போராட்டத்தின் தீவிரம் உச்சத்தினை அடைந்தது. இதனை கண்டு ஆங்கிலேய அரசாங்கம் மிரண்டது.

உடனே போராட்டத்தின் தீவிரத்தினை உணர்ந்த ஆங்கிலேய அரசு காந்திஅடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. அந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தினை நிறுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் வரியினை வாங்காமல் எங்களது சட்டத்தினை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு காந்தி அடிகளிடம் கூறினர்.

ஆங்கிலேயர்கள் உப்பிற்கான வரி சட்டத்தினை தவிர்ப்பதாக கூறியதால் அவரும் போராட்டத்தினை கைவிட்டார் . பின்பு ஆங்கிலேயர்கள் வரியினை நீக்கினார். இந்த போராட்டமானது இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

ஆகஸ்ட் புரட்சி [அ] வெள்ளையனே வெளியேறு இயக்கம் :

சுதந்திர போராட்டத்தின் உச்சம் தான் இந்த ஆகஸ்ட் புரட்சி என்றழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்த இயக்கம் துவக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது அகிம்சை போராட்டத்தினை காந்தி முன்னின்று நடத்தினார்.

காந்தியின் அறவழி போராட்டம் நினைத்ததை விட மிக சிறப்பாக தொடர்ந்து நாடு முழுவதும் நடந்தது. இதற்கு மேல் இங்கு ஒன்றும் பண்ண இயலாது என்று ஆங்கிலேயர்கள் எண்ணும் அளவிற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட தருணம் :

தொடர் அறவழி போராட்டத்தின் நிறைவாக பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அதன் படி ஆகஸ்ட் புரட்சி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் மாதமே இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிற்கு “ஆகஸ்ட் 15 1947″ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த அந்த தருணம் காந்தியடிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியது.

காந்தி அடிகளின் இறப்பு:

அகிம்சை வழியில் தனது போராட்டங்களை நடத்தி வெற்றிகள் பல கண்ட காந்தியடிகள் அவரது இறப்பு ஆயுதம் மூலமே நடந்தது. ஆம், சுதந்திரம் அடைந்த அடுத்த வருடம் 1948 ஜனவரி 30ஆம் நாள் புது தில்லியில் “நாதுராம் கட்சே” எனும் கொடியவனால் துப்பாக்கியின் மூலம் சுடப்பட்டார். அறவழியில் அன்பினை போதித்த காந்தி கடைசியில் குண்டடிப்பட்டு தன் இன்னுயிரை துறந்தார்.

காந்தி அடிகளின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலையினை ஏற்பட்டது. மேலும் நாடெங்கிலும் உள்ள மக்களும் கடும் துயர் கொண்டனர். காந்தி அடிகளின் நினைவாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 2 “காந்தி ஜெயந்தி” தினமாக அனுசரிக்க படுகிறது. மேலும் அவர் இறந்த ஜனவரி 30ஆம் தேதி “தியாகிகள் தினம்” என்றும் அனுசரிக்கப்படுகிறது.

காந்தி அடிகளின் நினைவுச்சின்னங்கள் :

காந்தி மணிமண்டபம் – சென்னை கிண்டியில் காந்திக்காக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தினை அமைத்து அதனை பராமரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் அதனை தினமும் ரசித்தப்படி உள்ளனர்.

காந்தி அருங்காட்சியகம் – மதுரையில் காந்தியின் நினைவாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக உள்ளது.

காந்தி சிலை – முக்கடலும் கூடும் குமரிக்கரையில் காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது . மேலும் காந்தியின் நினைவாக இந்தியா முழுவதும் பல சாலைகள் மற்றும் இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Similar questions