India Languages, asked by optimusprime1826, 10 months ago

alwar perumai paragraph tamil

Answers

Answered by Anonymous
3

Answer:

கவானைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை. ஆனால், 'என்னைவிட என் அடியவர்களே உயர்ந்தவர்கள்’ என்கிறார் இறைவன். அனுதினமும் இறைநாமத்தை உச்சரிக்கும் அடியவர்களுக்குப் பரம்பொருள் தரும் கௌரவம் இது! இதைக் கருத்தில் கொண்டு, தொண்டர்களுக்கெல்லாம் தொண்டராக, அடிப்பொடியாகத் திகழ்ந்தார் ஒருவர். அவர், தொண்டரடிப் பொடியாழ்வார்.

திருமண்டக்குடி. தொண்டரடிப் பொடியாழ்வார் அவதரித்த திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், அண்டக்குடியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அழகிய திருத்தலம் இது!

திருமண்டக்குடியில் அவதரித்த விப்ரநாராயணன், சிறு வயது முதலே ஸ்ரீமந் நாராயணன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் சென்று, அங்கே அழகிய நந்தவனம் அமைத்து, அங்கே பூக்கின்ற பூக்களைப் பறித்து, மாலையாகத் தொடுத்து, அரங்கனுக்கு அளித்து வந்தார் விப்ரநாராயணர்.

நந்தவனமும் பூமாலையுமாக, அரங்கனும் பூஜையுமாக இருந்த விப்ரநாராயணன், ஒருநாள்... சோழ மன்னனின் அரசவையைச் சேர்ந்த ஆடலழகி ஒருத்தியைச் சந்திக்க... மனத்தைப் பறிகொடுத்தார். 'இல்லறம் நடத்துவதற்குப் பொன்னும் பொருளும் வேண்டுமே?’ என யோசித்தவர், விறுவிறுவென அரங்கனிடம் சென்றார்; தனது ஆசையை வெளியிட்டார்.

அடியவரின் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பானா, அரங்கன்?! மனித உருவெடுத்து வந்தவர், நேராக அந்தப் பெண்ணிடம் சென்று, தனது தங்க வட்டிலைக் கொடுத்து, 'விப்ரநாராயணன் தங்களிடம் தரச்சொன் னார்’ என்று சொல்லிச் சென்றார்.

ஆழ்வார் பெருமை!

விடிந்தது; ஸ்ரீரங்கம் நகரமே பரபரப்பானது. 'அரங்கனின் தங்க வட்டிலைக் காணோமாம்!’ என ஊர் முழுவதும் சேதி பரவியது. அந்தத் தங்க வட்டில், ஆடலழகியிடம் இருப்பது தெரிய வந்தது. விப்ரநாராயணர்தான் அதை அரங்கனிடம் இருந்து திருடிக்கொண்டு அவளுக்கு வழங்கினார் எனப் பேச்சு பரவியது. ஆவேசமானான் மன்னன். உடனே விப்ரநாராயணரைப் பிடித்து வந்து, சிறையில் அடைத்தான்.

இறைவனை இந்த உலகமே அறியும். ஆனால், உத்தமமான அடியவர் யார் என்பதை, அந்த பகவான் உணர்த்தினால்தானே உலகம் அறியும்! ஆகவே, விப்ரநாராயணருக்காகத் தான் நடத்திய நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வரச் சித்தமானான் அரங்கன்.

ஆழ்வார் பெருமை!

அன்றிரவு, மன்னனின் கனவில் தோன்றிய அரங்கன், ''என் அடியவர் விப்ரநாராயணருக் காக, தங்க வட்டிலை யாமே கொடுத்தோம்'' என அருளினார். அதைக் கேட்டுச் சிலிர்த்தான் மன்னன். உடனே விப்ரநாராயணரை விடுதலை செய்தான்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும், ஓட்டமும் நடையுமாக அரங்கனைத் தரிசிக்க ஆலயம் நோக்கி விரைந்தார் விப்ரநாராயணர். ஆனால், பெரிய கோபுரத்தைக் கடந்து, அவரை உள்ளே வருவதற்கு, அரங்கன் அனுமதிக்கவில்லை. ''உனது சிந்தனையில் இருந்து விலகி, சிற்றின்பத்தில் ஈடுபட்டு, பாவத்தைச் சேர்த்துக்கொண்டாய். இதிலிருந்து நீ விடுபடவேண்டுமெனில், என்னுடைய பக்தர்களின் பாத மண்ணை எடுத்துக் காவிரி நதியிலும், கொள்ளிடத்திலும் கரைத்துப் புண்ணியம் தேடு!'' என்று சொல்லி அருள... ஸ்ரீமந் நாராயணனது அடியவர்களின் பாத தீர்த்தத்தைப் பெற்றார்; தொண்டரடிப் பொடியாழ்வார் எனும் திருநாமம் பெற்றார்.

ஸ்ரீரங்கத்தில், அவர் அமைத்த நந்தவனம், தொண்டரடிப் பொடியாழ்வார் நந்தவனம் என்றே அழைக்கப்படுகிறது. இவருடைய அவதார ஸ்தலமான திருமண்டக்குடியில் அழகுற அமைந்துள்ளது, ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில். இங்கே, தொண்டரடிப்பொடியாழ்வார் தனிச்சந்நிதியில் காட்சி தந்தருள்கிறார்.

மார்கழி மாதம், கேட்டை நட்சத்திர நன்னாளில் அவதரித்த தொண்டரடிப்பொடியாழ்வாரை, அவரது அவதார ஸ்தலத்துக்கு வந்து வணங்கி, அப்படியே ஸ்ரீரங்கநாதரையும் வழிபட்டுப் பிரார்த்தியுங்கள்; திருவருளும் குருவருளும் ஒருசேரக் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

- க.ராஜீவ்காந்தி

படங்கள்: ந.வசந்தகுமார்

முழு கட்டுரையையும் படிக்க

Answered by THUNDERBOLT007
0

Similar questions