நயம் பாராட்டுக ans pls guys
Answers
Answer:
நயம்’ என்னும் சொல்லுக்கு ’அழகு’ என பொருள் கொள்வர். நயம் பாராட்டுதல் என்பது பாடலில் அமைந்துள்ள அதன் அழகை சுட்டிக்காட்டுதலாகும். ஒவ்வொரு செய்யுளும் நயம் பாரட்டுதலுக்குரியதே. பா நயம் பலவகைப்படும்.
செய்யுள் (பா) தொகு
இருட்பகை இரவி இருளெனத் தம்மையும்
கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக்
கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி
மெய்யாத் தம்பெயர் வியம்பி வாயாசம்
பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும்
-மனோன்மணியம் பெ.சுந்தரனார்.
பொருள்நயம் தொகு
இருளுக்குப் பகைவன் கதிரவன். அவன் தம்மையும் இருளென எண்ணிக் காய்ந்து விடுவானோ எனக் காகங்கள் ஐயமுற்றுச் சிறகுகளைப் படபடவெனத் தம் மார்பில்படுமாறு அடித்துக்கொண்டு கா கா எனக் கரைந்தபடி திசையெங்கும் பறந்தோடின. (வாயாசம்- காகம்; இரவி -சூரியன்; சிறை-இறக்கை)
அணி நயம் தொகு
காலைவேளையில் காகங்கள் இரைதேடப் பறந்துசெல்வது இயல்பு. கதிரவன் இருளுக்குப் பகைவன்; ஆதலால் , தாமும் கரிய நிறத்துடன் இருப்பதனால் இருள் என எண்ணித் தம்மையும் காய்ந்துவிடுவானோ? என ஐயமுற்றுப் பறந்தன எனக் கவிஞர், தம் கற்பனையை அதன்மேல் ஏற்றிக் கூறுகிறார். மேலும், காகங்களின் சிறகடிக்கும் இயல்பான செயலையும் மார்பில் அடித்துக் கொள்வதாய்க் கூறுகிறார். இவ்வாறு இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி பயின்று வந்துள்ளது.
Explanation:
hope you get it and mark me as brilliant and thanks for free points (•‿•)