Answer only don't spamகட்டுரை:நான் விரும்பும் மரம்
Answers
Explanation:
மரம் கட்டுரை
மனிதன் உயிர்வாழவே மரத்தின் துணை தேவை என்ற போதிலும் , மரத்தினால் நமக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகள் ஏராளம் .காடுகள் அழிப்பு மூலமாக கடந்த களங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கலைவதே அனைத்து அரசுகளின் முக்கிய நோக்கமாக இன்று உள்ளது .
மரங்களின் தேவை
புவி வெப்பமயமாதலை தடுக்க மரமே நமக்கு உறுதுணையாகும்
காற்றில் ஆக்ஸிஜன் அளவை கட்டுக்குள் வைக்க
மனிதன் மற்றும் விலங்குகளுக்கு நழல்தர
பறவைகளுக்கு வீடாக மரமே உள்ளது
நீர் சுழற்சியின் முக்கிய அங்கமாக மரங்களே உள்ளன
தற்போதைய காலகட்டத்தில் முக்கிய பிரச்னையாக ஐநா சபை கருதுவது புவி வெப்பமயமாதல் பிரச்னையைத்தான்.இப்பிரச்னையை தவிர்க்க காடுவளர்ப்பே ஒரு முக்கிய ஆயுதமாகும்
அறிவியல் வளர்ச்சியில் வாகனங்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகும் , வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை ஆக்ஸிஜன் வாயுவாக மாற்றுவது மரங்களே ஆகும் . அதிக மழை பெற அதிக மரங்கள் நட வேண்டியது அவசியமாகிறது
காடு வளர்ப்பு
மனித கலாச்சாரத்தின் ஆரம்பம் தொட்டே மரங்களின் துணை கொண்டு வீடுகட்டும் பழக்கம் உள்ளது , மேலும் பேப்பர் , எரிபொருள் போன்ற காரணங்களுக்காகவும் மரங்களை வெட்டும் பழக்கம் அதிகமாக உள்ளது . புதிய மரங்களை நடுவதின் மூலமாக மரங்களின் எண்ணிக்கையை சரி செய்யலாமே தவிர பெரிய மரங்கள் தரும் பயன்களை இன்று நட்ட செடிகளின் மூலம் பெற இயலாது. எனவே ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு எண்ணிக்கையில் மரங்களை நடுவது அவசியமாகிறது .
இன்றைய காலகட்டத்தில் மரம் இல்லாமல் நாம் உயிர் வாழவே முடியாது என்ற நிலை இருப்பதால் ,மரங்களை பாதுகாத்தல் நம்மை பாதுகாத்தல் ஆகும்