Answer this fast!!!!Need more contents
plz don't spam
Answers
Explanation:
பெண்களின் கல்வி என்பது பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமை, அதன் நிலைமை, தடைகள், எதிர்காலம் போன்ற பல விடயங்களைக் குறிக்கும். வரலாற்றின் பெரும் பகுதியில், அனேக சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான கல்வி பெறும் வாய்ப்பைப் பெறவில்லை. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்ற பெண்ணிய இயக்கம், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான சம கல்வி வாய்ப்புக்களை ஓரளவு ஏற்படுத்தந்தன. இன்று சில மேற்குநாடுகளில் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பெண்கள் ஆண்களை விட கூடுதலான அதி உயர் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் இன்னும் பல நாடுகளில் பெண்களின் கல்வி ஆண்களை விடப் பின் தங்கியதாகவே உள்ளது. இதற்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியா ஆகும். கடைசிக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 53.63% பெண்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள், ஆண்கள் ஏறத்தாழ 20% விட அதிகமாக 75.26% கல்வியறிவு பெற்றவர்கள்.
hope it is helpful to u
mark me as brainliest please and thank my answers
.முன்னுரை
” பெண்கள் நாட்டின் கண்கள் ” என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஆன்றோர் வாக்கு.
” கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் ”
என்பது திருக்குறள். வள்ளுவர் வாக்கிற்கிணங்க பாரத நாட்டின் பெண்கள்; கல்வி என்னும் ஒளி பெற்றால் நாடு சிறந்ததோங்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. உலகின் மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்குபவர்கள் பெண்கள். அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை நல்லோர் அனைவரும் ஏற்றுக்கொள்வர். எனவே பெண்-கல்வியைப் பற்றி இங்கு பார்ப்போம்.
பெண் கல்வியின் அவசியம்
ஆண் ஒருவர் கல்வி கற்றால் அவர் ஒருவருக்கு மட்டுமே அறிவு வளர்ச்சி அடையும். ஆனால், பெண் ஒருவர் கல்வி கற்றாலோ அக்குடும்பம் முழுதும் கல்வி அறிவும் பெறும். ஏனென்றால் தாயின் மடியிலேயே குழந்தை கல்வி கற்க ஆரம்பித்து விடுகிறது. எனவே அனைத்து குழந்தைகளும் கல்வி அறிவு பெறும்பொழுது குடும்பம் முழுவதும் கல்வி அறிவு பெறுவது இயல்புதானே !
பண்டைத் தமிழகத்தில் பெண் கல்வி
புவி ஆளும் மன்னர்கள், கவியாளும் புலவர்களை போற்றினர் என்பது வரலாறு கூறும் உண்மை. இப்புவி மன்னர்களுக்கு நல்லனவற்றை எடுத்து சொன்ன புலவர்களில் பெண்களும் அடங்குவர். இப்பெண் புலவர்களில் ஒளவையார், வெண்னிகுயத்தியார், காவற்பெண்டு, நற்பசலையார், பொன்முடியார் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
பெண் கல்விக்கு எதிரான வாதமும் மறுப்பும்
பெண்களின் வளர்ச்சியையும் முக்கியத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்த வீணர்கள் சிலர், ” அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு ? ” என்றும் ” பெண் புத்தி பின் புத்தி ” என்றும் உளறி வைத்தனர்.
ஆனால் பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பாரதியார் ” பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ” என்று பாடினார். ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் மறைந்து இருக்கிறாள் என்பது அனைத்துலகும் ஏற்றுக் கொண்ட உண்மை வாக்கு. தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை ஆகும் .
பெண் கல்வியின் பயன்கள்
பெண்கள் கல்வி பெற்றதால் சமையல் அறையில் முடங்கி கிடந்த பெண் சமுதாயம் சாதனை பல புரிந்துள்ளது. இன்று உலகின் பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் கடமைகளை ஆற்றி உள்ளனர். விளையாட்டுத்துறை முதல் விண்வெளி ஆராய்ச்சி துறை வரை சாதனைகள். கல்பனா சாவ்லா முதல் பி வி சிந்து வரை உதாரணங்களாய் இருக்கின்றனர். ஆசிரியர் தொழிலில் பெரும்பான்மை வகிப்பவர்கள் பெண்களே. பாரத நாட்டை ஆண்டவர்களில் ஜான்சி ராணி, அகல்யாபாய் முதல் இந்திரா காந்தி, ஜெயலலிதா வரை பெண்களும் உள்ளனர் . பல்வேறு நாடுகளிலும் ஆட்சி பொறுப்பை பெண்கள் ஏற்று நடத்தி காட்டி வருகின்றனர் . ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தது வருகின்றனர்.
முடிவுரை
நாடும் வீடும் நலம் பெறவும் வளம் பெறவும் ஒளியோடு விளங்கவும் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும். பெண்களை கடவுளாக தொழுகின்ற நாமும் பெண்களை கல்வி பெறச் செய்வோம் . வீட்டில் விளக்கேற்றும் பெண்கள் உலகிற்கு ஒளியாகத் திகழ பெண்கல்வியை வளர்ப்போம்.