Article on importance of conservation of water in tamil
Answers
மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீர் தரை மட்டத்தில் ஓடி வீணாவதற்கு முன்னதாகவே சேகரித்து அதை கொள்கலன்களில் ஒருங்கே குவித்து வைப்பதாகும். மழைநீரை பூமிக்கடியில் உள்ள பாறைகள் உறிஞ்சுவதற்கு முன்னதாகவே சேகரிப்பதால் அதை பிறகு குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் அல்லாமல் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்த முடியும். கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தே மழைநீரை சேகரிப்பது ஒரு முறை ஆகும். புல் மற்றும் இலைகள் தவிர உலோகத் தகடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மழைநீர் ஓடுவதை தடுத்து நிறுத்தி சேகரிப்பது வழக்கம்.
மழைநீர் சேகரிப்பை கடைப்பிடிப்பது இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.:
என்ன: மழைநீர் சேகரிப்பு வாட்டர் சப்ளை, உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும்.
யார்: உள்ளூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு பெருமளவு உதவியாக இருக்கும்.
எப்படி: மழைநீர் சேகரிப்பின் மூலம் நீர் விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பு மேம்படும், அது வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.
மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கிய முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு மாநிலம். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் 50,000 மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கள் நிறுவப்போவதாக சென்னை நகர மேயர் 2014 மே 30-ம் தேதி அறிவித்தார். [1]
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4,000 தெப்பக்குளங்கள் உள்ளன. இந்த தெப்பக்குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல தெப்பக்குளங்களும் தூர்வாரி சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் தான் தற்போது உள்ளது.
அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து சென்னை நகரில் உள்ள சுமார் 40 தெப்பக்குளங்களை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் மழைநீர் சேகரிப்புக்கு இந்த குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும்