bharathiyar essay in tamil with sub headings in tamil
Answers
Answer:
i don't now tamil
sorry
முன்னுரை
தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் பலர் அவர்களில் பாரதியார் தனக்கென்று தனியிடம் அமைத்துள்ளார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று தமிழை வியந்து போற்றுகிறார் பாரதியார்.
பண்போடும் பணிவோடும் பகுக்கப்பட்ட பட்டறிவோடும் பெண்ணியம் போற்றுகின்ற பகுத்தறிவினை வளர செய்து “பாட்டு திறத்தாலே இவ்வையகத்தை பாலித்திட வேண்டும்” என்று எழுச்சியோடு பாடிய மகாகவி பாரதியார்
முறுக்கிய மீசையும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் எளிமையான தோற்றமும் கொண்ட பாரதியார் காலம் காலமாக இருந்து வந்த செய்யுள் நடை கவிதை மரபை மாற்றி புது கவிதைகளுக்கு வித்திட்ட யுகபாரதியாவர்.
காலம் காலமாக கிடந்த மூடநம்பிக்கைகள், சாதிய ஒடுக்கம், பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் தீண்டாமை போன்றவற்றுக்கெதிராக கிளர்ந்தெழுந்த பாரதி தனது சொற்கணைகளால் அடக்கு முறைகளை உடைத்தெறிந்தார்.
கற்றறியா பாமரர்க்கும் நற்கருத்துக்களை தன் இலகு நடை கவிதைகளால் கொண்டுபோய் சேர்த்த கவிஞராவர்.
கடந்த தலைமுறைகளின் ஆகச்சிறந்த சமூக பற்றும் தமிழ் பற்றும் தேசப்பற்றும் கொண்ட ஒரு ஒப்பற்ற கவிஞனின் வரலாறு, வாழ்க்கை முறை, தமிழ்ப்பணி, சமூகப்பணி மற்றும் பெண் விடுதலை கருத்துக்கள் போன்றவற்றை இக்கட்டுரை அளவளாவுகிறது.
பிறப்பு
இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரத்தில் சின்னசுவாமி இலட்சுமி அம்மையாருக்கு 1822 மார்கழி 11 ம் திகதி மகனாக பிறந்தார்.
இவரது இயற்பெயர் சுப்பிரமணியம் இவர் 5 வயது இருக்கும் போதே இவரது தாயார் காலமானார் இவர் தனது 7 வயதிலேயே கவிதை எழுத துவங்கி விட்டார்.
இவருக்கு 11 வயது இருக்கும் போது இவரது கவிபாடும் ஆற்றல் கண்டு எட்டையபுர மன்னன் அவையில் இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார் அன்று முதல் இவரது பெயர் சுப்பிரமணிய பாரதி என்றானது.
தமிழ்ப்பணி
பாரதியார் இலக்கியங்களை ஜயம் திரிபுற கற்று அவற்றை தழுவி அழகான பல கவிதைகளை எமக்கு தந்துள்ளார். இவை இலகு நடையும் இலக்கிய நயமும் பொருள் செறிவும் உடைய புது கவிதைகளாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை பாரதியையே சாரும்.கண்ணன் பாட்டு குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பெண்கள் விடுதலைகும்மி போன்ற பல கவிதைகளை பாரதியார் தமிழுக்கு தந்துள்ளார்.
பகவத்கீதையை தமிழில் மொழி பெயர்த்தார் மேலும் எட்டையபுர அரசவையில் அரசவை கவிஞராக பணிபுரிந்து பல கவிதைகளை இயற்றினார் இவரின் எழுத்துக்கள் 1903 இல் அச்சடித்து வெளியாக துவங்கின.
பெண் விடுதலை
பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் ஆணாதிக்கம் மேலோங்கி பெண்கள் மீதான அடக்குமுறை அதிகமாக காணப்பட்டது.
பெண்கள் கல்வி கற்க கூடாது ஆண்களுக்கு இணையாக வேலை பார்க்க கூடாது. சிறுவயது திருமணம் சீதன கொடுமைகள் இவற்றுக்கெதிராக பாரதி குரல் கொடுத்தார்
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்” என்று பெண்கள் விடுதலை கும்மி எனும் கவிதையில் பாடினார்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை தன்னை கொழுத்துவோம்” என்று பாடியவர்
பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் கல்வி கற்க வேண்டும் ஆண்களுக்கு இணையாக வேலை செய்ய வேண்டும் விரும்பியவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை சமூகத்தில் வலியுறுத்தி
“வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்ற வரிகள் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.
இதுவே பிற்காலத்தில் பாரிய சமூக மாற்றத்தையும் பெண்கள் சுதந்திரம் அடைவதற்கான விதை அன்று பாரதியினால் போடப்பட்டதாகும்.
பாரதி கண்ட புதுமை பெண்கள் இன்று தலைநிமிர்ந்து வாழ பாரதி அன்று போராடியிருந்தார்.
முடிவுரை
பாரதி என்ற மகா கவிஞன் தான் வாழந்த காலத்தில் தமிழையும் தன் தேசத்து மக்களையும் நேசித்து மக்களிடையே பகுத்தறிவினை வளர்த்து
இருண்டு கிடந்த மக்கள் வாழ்வில் தன் எழுத்துக்களால் வெளிச்சம் கொடுத்து “எனி ஒரு விதி செய்வோம்” என்று பாடிய புதுமை கவிஞன் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த கவிஞன் என்றால் அது மிகையல்ல.
பாரதி காட்டிய வழியில் நாமும் தமிழையும் எம் சமூகத்தையும் நல்வழியில் இட்டுச்செல்வோம்.