பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
Answers
Answered by
2
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம்
- பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு ஆனது அமெரிக்க மேலாதிக்கத்திற்கு போட்டியாக மற்றும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு மாற்று அமைப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது.
- மேலும் சொந்த மற்றும் சுயமாக உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதலை நிரூபிக்கும் விதமாகவும் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.
பிரிக்ஸின் நோக்கங்கள்
- பிராந்திய வளர்ச்சியினை அடைதல்.
- வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுதல்.
- மிகப்பரந்த அளவில் பங்களிப்பினை மனித மேம்பாட்டிற்கு அளித்தல்.
- அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
- உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றின் மூலமான வணிக ஒத்துழைப்பினை அதிகரித்தல்.
Answered by
1
Explanation:
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா2012ன் படி இதன் உறுப்பு நாடுகளாகும்.[2] இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகளாகும். 2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்
Similar questions
English,
4 months ago
Hindi,
4 months ago
Political Science,
10 months ago
Math,
10 months ago
Math,
1 year ago