India Languages, asked by pr4936, 8 months ago

Can Anyone say the speech about ' Anna Nootrandu Noolakam' Its very urgent . Please.... I want for std 6
Please answer in Tamil Immediately

Answers

Answered by harinidoll123
3

Answer:

here is the answer

Explanation:

அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் "அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.

நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடன்" (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் "அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்" இணைக்கப்படும்.

Similar questions