CBSE BOARD X, asked by arameshamb1971, 8 months ago

மொழிபெயர்ப்பு - செம்மை குறித்து எழுதுக, class 10 level , soon please ​

Answers

Answered by ritapaul0707
7

Explanation:

படைப்பிலக்கியத்துக்கு நிகராக மதிக்கப்படும் மொழிபெயர்ப்பு இலக்கியமானது உலகில் வழங்கிவரும் பல்வேறு மொழிகளின் பிரதிகளினூடாக காணும் பல்வேறுபட்ட மக்களது கலைரீதியான உணர்வு வெளிப்பாடு முதல் காலாச்சரம், பண்பாடு, வாழ்முறை, அரசியல், சிந்தனைப்போக்கு என யாவற்றையும் எண்ணற்ற பெயர்ப்புப் பிரதிகள் வழி எல்லைகள் தாண்டி கொண்டு சேர்ப்பது. தூலமான அரசியல், சமூக பிரயத்தனங்களை விடவும் உலக மானுடன் என்ற கருத்தாக்கம் மொழிபெயர்ப்புப் பிரதிகளினூடாக காலம் காலமாக இலக்கிய வாசகர்கள் மனதில் வலுவுடன் தொழிற்பட்டு வருவது. மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் வழியாக உலகின் இலக்கியங்கள் யாவும் புதிய வெளிச்சத்தையும் அதன் பாதிப்பினால் புதிய தடங்களையும் கண்டிருக்கின்றன. இதற்கு தமிழ் இலக்கியமும் விலக்கல்ல என்றே சொல்ல வேண்டும். தமிழின் நெடிய இலக்கியப் பாரம்பரியத்தில் தொன்று தொட்டே, மொழிபெயர்ப்பின் ஒரு வகையாக கருதப்படும் தழுவல் ஓர் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் வடமொழி இலக்கியங்களைத் தழுவி படைப்புகள் ஆக்கப்பட்டதாக ஆய்வாளர் கூறுவர். கம்பனின் "ராமாயணம்" மிகப் போற்றப்படும் தமிழ்ப்படைப்பேயாயினும் அது வடமொழி மூலத்தைத் தழுவியது என்பதை நாம் மறக்கலாகாது. ஐரோப்பியர் வருகை தொடங்கி இன்று வரை தமிழிலக்கியத்துக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தொடர்ச்சியாகத் தங்கள் பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பும் தனக்கென பொருட்படுத்தத்தக்க ஓர் இடத்தைக் கொண்டதாகவே இருக்கிறது.

Answered by oviyasreek
11

Answer:

மொழிபெயர்ப்பு உலகம் முழுவதும் மக்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்பு உதவுகிறது. இது அறிவு பரிமாற்றத்திற்கான ஒரு கூரியர் ஆகும், கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு, ஒரு உலகளாவிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. மிகவும் திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் திறவுகோல். மொழிபெயர்ப்பு ஆய்வுகள் பயிற்சியாளர்கள் அந்த திறன்களை உருவாக்க உதவுகிறது.

Similar questions