இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் இருப்பிட பெயர்களும் இயற்கையோடு இயைந்து இருந்தன - கூற்றினை மெய்ப்பிக்க
class 11 Tamil நெடுவினா
Answers
Explanation:
மனிதன் தோன்றியது மலைநிலம்:
மலை, மனித சமூகத்தின் ஆதி நிலமாகும். தமிழரின் பண்டைப் பதிவுகள், கடவுளையும் மலையையும் வாழ்வில் தொடர்புபடுத்துவனவாக விளங்குகின்றன.
மலை, தமிழ் இலக்கியங்களில் ‘குறிஞ்சி’ எனக் குறிக்கப்படுகிறது. திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள், மலைசார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.
இயற்கையோடு இயைந்த வாழ்வு :
பழங்குடியினர் ஓடும் நீரையே குடிநீராகப் பயன்படுத்தினர். தம் குடியிருப்புப் பகுதியைவிட உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறுகள், ஓடைகளில் நீர் எடுத்துப் பருகினர்.
மலைஉச்சியில் அமைந்த பழங்குடித் தலைவரின் வீடு, வாழ்விட வடிவமைப்பு, வாழ்வியலில் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தைக் காட்டுகின்றன.
சொல்வழக்கு :
சிந்துவெளி, திராவிட மலைவாழ் மக்களின் அன்றாடப் புழங்கு சொநகளின் தொடர்ச்சி சிந்திக்கத்தக்கதாகும்.
தென்னிந்திய மலைவாழ் மக்களிடையே மலை, மலா, மலே என்னும் சொற்கள் வழங்குகின்றன.
மலை’, ‘குன்று’ என்னும் சொல்லாட்சி, மலை சார்ந்த மக்களிடம் வழங்குகிறது சிறப்பாகும்.
கோட்டை :
‘கோட்டை’ என்னும் சொல், செயற்கையான காப்பு அரண்களான கோட்டைகளைக் கட்டி எழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியில் தோன்றின என்பதைவிட, தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதே உண்மை.
மலைப் பெயர்களின் நீட்சி :
வடமேற்கு நாடுகளில் கண்டறியப்பட்ட சான்றுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நெடுமலைகளோடு பொருந்திப் போகும் திராவிடர்களின் மலைப் பெருமிதத்தின் நீட்சியாக உள்ளன. அப்பகுதிகளில் திராவிடர் வாழ்ந்த சான்றுகளை உறுதி செய்கின்றன.
இவற்றால், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வில், இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தமை புலப்படும்.