Cleanliness story in tamil
Answers
ஒரு ஊரில் மைதிலி என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவள் அமெரிக்கா புறப்பட்டாள். அவள் அலுவலகத்தில் அவளுக்கென்று வீடும் கொடுத்திருந்தனர்.
நெஞ்சம் நிறைந்த கனவுகளுடன், கண்களில் பட்டாம் பூச்சி பறக்க, தனக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு சென்றாள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவள் மனதில் ஏனோ சொல்ல முடியாத உற்சாகம் ஏற்பட்டது.
இனி தன் வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகிறது என்ற நினைவு அவள் மனதை ஆட்கொண்டது. அந்த வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். இறுதியாக கழிவறைக்கு வந்த அவள் முகம் சுருங்கியது. அது சுத்தமாக இல்லை.
உடனே ஹாலுக்கு வந்து அங்கிருந்த தொலைபேசியில் குடியிருப்பு அதிகாரியிடம் பேசினாள். கழிவறையை சுத்தம் செய்ய ஆள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டாள். சிறிது நேரத்தில் அனுப்புவதாகக் கூறி அவர் தொலைபேசியை வைத்தார். இதற்கிடையே மைதிலி தான் கொண்டு வந்த பொருட்களை எடுத்து வொளியே வைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அழைப்பு மணி ஒலித்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக கொண்டே கதவைத் திறந்தாள். அங்கு 'கிங்காங்' சைஸுக்கு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். இவளைப் பார்த்ததும் மேடம் கழிவறையை சுத்தம் செய்ய வந்திருக்கிறேன் என்றான். உடனே கதவை முழுதாக திறந்து அந்த நபருக்கு கழிவறையைக் காட்டினாள். அவர் சுத்தம் செய்கையில் மைதிலி இந்தியாவில் இருக்கும் தன் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
தன் வேலையை முடித்துவிட்டதாகக் கூறிவிட்டு அந்த நபர் வெளியே சென்று விட்டார். மறுநாள் காலையில் தான் வேலை பார்க்கப்போகும் அலுவலகத்திற்கு பல எதிர்பார்ப்புடன் சென்றாள் மைதிலி. அவளை வரவேற்பாளர் மேனேஜரிடம் அழைத்துச் சென்றாள்.
அறைக்குள் நுழைந்த மைதிலிக்கு அந்த கடும் ஏசிக் குளிரிலும் முகம் வியர்த்து வெளிறியது. அதைக் கண்ட மேனேஜர், அதைப் பொருட்படுத்தாமல் புன்னகையுடன் வரவேற்று பணி குறித்து பேசத் தொடங்கினார்.
அவர் பேசப் பேச மைதிலிக்கு வியர்வை ஆறாக பெருகத் தொடங்கியது. அவரது பேச்சுக்கு நடுவே குறுக்கிட்டு, என்னை மன்னித்து விடுங்கள் சார் என்றாள். முதன்முதறையாகப் பார்க்கும் மனிதரிடம் மைதிலி எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
காரணம், அந்த மேனேஜர்தான், நேற்று மைதிலி வீட்டுக் கழிவறையை சுத்தம் செய்ய வந்தவர். அவள் மன்னிப்புக் கேட்டவுடன் அவர் முகத்தில் புன்முறுவலுடன் நாம் எப்பொழுதும் நம் வீட்டு வேலைகளைச் செய்ய வெட்கப்படக் கூடாது. ஏனெனில் எந்த வேலையும் கேவலமானதன்று.
நமது வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும் நமது பொறுப்பு. அதை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது கடமை என்று நட்பான அட்வைஸ் கொடுத்தார். அவரது வார்த்தைகள் மைதிலியின் மனதில் அம்பு போல் தைத்தது.
இந்தக் கதையிலிருந்து என்ன தெரிகிறது...?
எந்த வேலையும் கேவலமானதன்று. அது நம் நினைப்பை பொறுத்தது. நம் வீட்டு வேலைகளைச் செய்ய அடுத்தவர்களை எதிர்பார்ப்பது நியாயமல்ல. நம்முடைய வேலைகளை, நமது பொறுப்பில் உள்ளவற்றை நாமே செய்வதுதான் சரி என்பதைத் தான் இந்தக் கதை சொல்கிறது.
அடுத்த வாரம் இன்னொரு கதையுடன்..!