India Languages, asked by arshpreet6566, 9 months ago

Coronavirus short essay in Tamil

Answers

Answered by GAMER5050
1

Answer:

கொரோனா தொற்று எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வெளிப்படலாம். அதனால் சாதாரண அறிகுறிகளையும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துவருகிறார்கள். கோவிட் 19 தொற்று நோய் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறட்டு இருமல். ஆனால் இவை சாதாரணமாக வந்தாலே அதற்கு காரணம் வைரஸ் தொற்றுதான். ஆனால் சாதாரண வைரஸ் தொற்று வந்தாலே அது கொரோனா அறிகுறிதான் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கிறார்கள். இதனால் சளி, இருமல் வந்தாலும் கை வைத்தியமோ அல்லது சுயமாக மாத்திரைகளோ எடுத்துக் கொள்கிறார்கள்.டும் தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அதேநேரம் சளி, இருமல் பிரச்சனை இருக்கும் போது அவை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது இந்த நேரத்தில் முக்கியம் என்றும் கூறுகிறார்கள். சமீபத்தில் சுவை உணர்வு குறைவது கூட இதன் அறிகுறியாகவும் இருக்கலாம். முடிந்தவரையிலும் உங்களுக்கு அறிகுறி தெரிந்தால் நீங்களே உங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. நாம் அலட்சியப்படுத்தும் அறிகுறிகள் பலவும் சமயத்தில் வைரஸ் தொற்றாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதால் வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப குணப்படுத்துவதும் சற்று சிரமம் என்பதை இத்தருணத்தில் உணர்ந்து எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

Explanation:

naanum tamiyan dhan...

PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE and follow me

Similar questions