ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, ___________ உடன் ஒருங்கிணைக்கப் படுகிறது.
Answers
Answer:
ஜீன் குளோனிங்
குளோனிங் முறை என்பது மரபுப் பண்பில் ஒத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறை ஆகும்.ஒரு ஜீன் அல்லது டி.என்.ஏதுண்டானது ஒரு பாக்டீரிய செல்லினுள் செலுத்தப்படுகிறது.அந்த பாக்டீரிய செல் பகுப்படையும் போது, அதனுடன் சேர்ந்து செலுத்தப்பட்ட ஜீன் அல்லது டி.என்.ஏ துண்டின் நகலும் பெருக்கம் அடையும்.
அடிப்படை நிகழ்வுகள்
விரும்பிய டி.என்.ஏ துண்டினை ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகளை பயன்படுத்தி பிரித்தெடுத்தல்.டி.என்.ஏ துண்டினை தகுந்த கடத்தியினுள் செலுத்திமறுச்சேர்க்கை டி.என்.ஏவைஉருவாக்குதல். பாக்டீரியா செல்லினுள்மறுச்சேர்க்கை டி.என்.ஏவை செலுத்துதல்.பாக்டீரியா செல் பகுப்பின் போது, டி.என்.ஏவின் நகல் பெருக்கத்தினை ஏற்படுத்துதல்.பாக்டீரியா செல்லில் புதிய ஜீன் தன் பண்பினை வெளிப்படுத்துதல் முதலியன ஆகும். இம்முறையினை பயன்படுத்திமருந்துகள், நொதிகள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கலாம்.
பிளாஸ்மிட்
- குளோனிங் என்பது ஒரு உயிரினத்தை போலவே எந்த வித மரபியல் பண்புகளும் மாறுபாடாமல் மற்றொரு உயிரினத்தை உருவாக்குவதாகும்.
- மரபியல் பண்புக்கு காரணமாக இருக்கும் டி.என்.ஏ துண்டினை பாக்டீரியா என்னும் தகுந்த பிளாஸ்மிட்டுடன் செலுத்தப்படுகின்றன.
- இதனால் பாக்டீரியா செல்பகுப்படைந்து செலுத்தப்பட்ட டி.என்.ஏ துண்டு நகல் பெருக்கம் அடைகின்றன.
- ஜீன் குளோனிங் முறையில் உண்டாக்கும் உயிரினமானது விரும்பத்தக்க பண்புகளை கொண்டதாக இருக்கும்.
- ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினத்திற்கு ஜீனை மாற்றும் போது உருவாகும் புதிய டி .என்.ஏ மறுசேர்க்கை டி .என்.ஏ என்று அழைக்கப்படுகிறது.
- ஜீன் குளோனிங் முறையை பயன்படுத்தி முதன் முதலில் டாலி என்ற பெண் செம்மறி ஆட்டுக்குட்டி உருவாக்கபட்டது.