India Languages, asked by Oliviya3688, 1 month ago

தமிழரின் தனிப்பெரும் விழா “பொங்கல்” பற்றி தெரிந்துக்கொள்வோம்

Don't answer if u don't know the language ​

Answers

Answered by Anonymous
104

\huge\bold\red{AnSwer࿐}

\bf{⇝போகி}

போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

══━━━━━━━━══

\bf{⇝தைப்பொங்கல்}

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்

══━━━━━━━━══

\bf{⇝மாட்டுப் \:  பொங்கல்}

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.

இதை கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

══━━━━━━━━══

\

\bf{⇝காணும் \:  பொங்கல்}

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும்.

காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் என்று அழைப்பர்.

இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.

 \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \: \bf\red{நன்றி...!!}

══━━━♥━━━━══

Similar questions