மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
•Don't spam.
•Spam will be reported.
Answers
Explanation:

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு
இயற்கை சீற்ற மேலாண்மை

சமூக செயல்பாடுகள், பொருளாதாரம், சமூகம், சுற்றுசூழல் போன்றவற்றில் பேரழிவுகளை ஏற்படுத்தி வளங்களை பயன்படுத்த முடியாதபடி செய்யும் இயற்கையின் செயல்பாடுகளே இயற்கை சீற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இயற்கை சீற்றங்கள் அபாயமான, ஏதுநிலையில் உள்ள மற்றும் அளவிட முடியாத அல்லது முன்கூட்டி அறிய முடியாத இயற்கை செயல்பாடுகளினால் ஏற்படுகிறது.
இயற்கை பேரழிவு ஏற்படும் பொழுது பெருமளவு மக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பொருளாதார பேரழிவுகள் மற்றும் இயல்பற்ற சுற்றுசூழல் போன்றவை ஏற்படும்.
வெள்ளம், பூகம்பம், அல்லது புயல் போன்ற எந்த ஒரு அபாயமாக இருந்தாலும், அதன் அழிவு மிகவும் தீவிரமாகவும், அபாயமாகவும் இருக்கும். ஏனென்றால் சீற்றங்களை தாங்க போதுமான வளம் இல்லை. மேலும் நோய்வாய்ப்பட்ட மக்கள், இதற்கு ஒரு காரணமாக அமைகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களினால் அதிக அளவு உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுகிறது. உதாரணமாக மக்கள் வாழமுடியாத பாலைவனப்பகுதியில் உற்படும் அபாயங்கள் சீற்றங்களாக எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. மேலும் அச்சீற்றங்களின் பாதிப்பை கணக்கிட முடியாது.
உயிரிகளின் வாழ்வு மற்றும் சுற்றுசூழல் பொருளாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் அமையும் எந்த சீற்றங்களும், இயற்கை அபாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ‘ஹஷாடு’ (hazard) என்ற வார்த்தை ‘ஹஸாடு’ என்ற பிரஞ்ச் வார்த்தையில் இருந்து தோன்றியுள்ளது மற்றும் ‘அஜாக்ர்’ (az-zahr) என்ற அரேபிய சொல்லிற்கு மாற்றம் அல்லது அதிர்ஷ்டம் என்று பொருள். பொதுவாக அபாயங்கள் இயற்கையான அபாயங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட அபாயங்கள் என இரண்டு வகைப்படும்.
I. இயற்கை அபாயங்கள்:
இவ்வகை அபாயங்கள் இயற்கை செயல்பாடுகளினால் விளைகின்றன. (வானிலையியல், பெளதீக, கனிம மற்றும் உயிரியல் மாறுபாடுகளினால் ஏற்படும் அபாயங்கள்)
சூராவளி புயல்கள், சுனாமி அலைகள், பூகம்பங்கள், மற்றும் எரிமலைச் சீற்றங்கள் போன்றவை இயற்கை செயல்பாடுகளினால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் ஆகும். நிலச்சரிவுகள், வெள்ளம், வறட்சி தீ விபத்துகள், போன்ற இயற்கை சமூக அபாயங்கள் மனித செயல்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் இவை இரண்டினாலும் ஏற்படும் எடுத்துக்காட்டாக மிக அதிக மழை நிலச்சரிவு அல்லது மனித செயல்பாடுகளினால் ஏற்படும் பழிவுகள் ஆகியவற்றால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
II. மனிதனால் உருவாக்கப்பட்ட அபாயங்கள்:
இவ்வகை அபாயங்கள் மனிதனின் உதாசின செயல்பாடுகளினால் ஏற்படுகிறது. இவ்வகை மனிதனால் உருவாக்கப்படும் அபாயங்கள், தொழிற்சாலை செயல்பாடுகள் அல்லது ஆற்றல் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வெடிமருந்து செயல்பாடுகள், நச்சு பொருட்களின் கசிவுகள், சுற்றுப்புற தூய்மை கேடு, நீர்த்தேக்க குறைபாடுகள், போர்கள் அல்லது உள்நாட்டு இராணுவ ஒத்திகைகள் போன்றவற்றினால் ஏற்படுகின்றது.
அபாயங்கள் பல வழிகளில் ஏற்படுகிறது. அடிக்கடி ஏற்படுகன்றன. சில அபாயங்கள் ஏப்போதாவது ஏற்படுகின்றன. அபாயங்களின் தோற்றத்தினை பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன.
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள்:
பூகம்பம் :
- இதனைப் பூமி அதிர்ச்சி அல்லது நிலநடுக்கம் என்று கூறுவர்.
- நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்.
சூறாவளி :
- சூறாவளி என்பது கடலில் ஏற்படுகின்ற குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது குறைந்த அழுத்த மண்டலமாகும்.
- புயலின் மத்தியில் குறைந்த அழுத்தமும் அதனைச் சுற்றி அதிக அழுத்தமும் உருவாகியிருந்தாலோ, புயலின் மத்தியில் அதிக 15 அழுத்தமும் அதனைச் சுற்றிலும் குறைந்த அழுத்தமும் உருவாகியிருந்தாலோ சூறாவளி உண்டாகும். இது கடற்பகுதியிலிருந்து நிலப்பகுதியைக் கடக்கும்.
சுனாமி :
- கடலுக்கு அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல்நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்தும்.
- இதனைக் கடற்கோள் என்றும் ஆழிப் பேரலை என்றும் கூறுவர்.
SPJ2