En Naadu En urimai katturai
Answers
No party system is ideal for all countries and all situations because the party system is not what a country actually chooses. It evolves over a long time, depending on the nature of society, its social and regional divisions, its history of politics and its system of elections. These cannot be changed quickly. Each country develops a party system which is conditioned by its special circumstances. For example, if India has evolved a multi-party system, it is because the social and geographical diversity in such a large country is not easily absorbed by two or even three parties.
இந்தியாவில் மனித உரிமைகள் இந்தியா வளர்ந்து வருகின்ற நாடு மற்றும் சுயாட்சி, மதசார்பற்ற, மக்களாட்சி குடியரசு மற்றும் இதன் முன்வரலாற்றில் காலணி ஆதிக்கத்தின் கீழிருந்தமை போன்ற நிலைகளை கடந்து வந்தாமையாலும், மிகப் பரந்த நிலப்பரப்ப்பையும் அதனுள் பல்வேறு மாறுபாடுகள் கொண்ட மக்களையும் உள்ளடக்கிய சூழல்களில் இந்திய நாட்டின் மனித உரிமைகளை பற்றி அலசுவது என்பது சற்று சிக்கலான விடயமாகும்.
இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான சமயசார்பு உரிமை, பேச்சுரிமை, செயலாட்சியர்கள் மற்றும் நீதிமுறைமைகள் , நாட்டின் பிறவிடங்களுக்கும் மற்றும் அண்டை நாடுகளுக்கும் செல்லும் உரிமை, போன்ற உரிமைகள் மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுபவைகளாக அமைந்துள்ளன.
இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களும், தீண்டாமையினர் என்ப்படும் தலித் சமுதாயத்தினரும் அடிக்கடி ஒரு சில முன்னேறிய வகுப்புக் குழுவினரின் மனித உரிமைகள் மீறல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆறு அடிப்படை உரிமைகள்
1. சம உரிமை (கூறு 14-18)
சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம். சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துதல் குற்றம். அரசுப் பணிகளைப் பெற அனைத்துக் குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. தீண்டாமை குற்றம். நெடுங்காலம் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவது சலுகை அல்ல அவர்களுடைய உரிமை.
2. சுதந்திர உரிமை (கூறு 19-22)
பேச்சு, கருத்து சுதந்திர உரிமை. அமைதியான, சரியான நோக்கத்தில் கூட்டம் நடத்தும் உரிமை. சங்கம், அமைப்புகள் தொடங்கும் உரிமை. தேசத்தின் எந்தப் பகுதிக்கும் பயணம் செல்வதற்கான, எங்கு வேண்டுமானாலும் குடியேறுவதற்கான உரிமை.
6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறும் உரிமை (கூறு 21(ஏ)) 2002-ல் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. 2009-ல்தான் இது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை (கூறு 23-24)
வலுக்கட்டாயமாகப் பணியில் அமர்த்தி வேலை வாங்குதல் சட்டப்படி குற்றம். 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிற்சாலை, சுரங்கம் உள்ளிட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துதல் குற்றம்.
4. மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை (கூறு 25-28)
தன் விருப்பம்போல எந்த மத்தையும் பின்பற்றும் உரிமை.
5. கலாச்சார மற்றும் கல்வி கற்கும் உரிமை (கூறு 29-30)
சிறுபான்மையினர் தங்களுடைய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை. சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் கல்வி நிறுவனங்களை நிறுவும் உரிமை.
6. அரசியல் அமைப்பைச் சீர்மைப்படுத்தும் உரிமை (கூறு 32-35)
அடிப்படை உரிமைகளை மக்களிடம் இருந்து அரசே பறிக்கக்கூடும் என்று இந்திய அரசியலமைப்பு கருதுகிறது. அப்படி நிகழும்பட்சத்தில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைத் தற்காத்துக்கொள்ளக் குடிமக்கள் கூறு 32-ன் படி நீதிமன்றத்தை அணுகும் உரிமையும் உள்ளது.
சமகாலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் முக்கியம் நம்முடைய உரிமைகளை அறிந்துகொள்ளுதலும் வரித்துக்கொள்ளுதலும். இனி சட்டம் நம் கையில்தானே!
தமிழ் வாழ்க'