Biology, asked by nasirabdul9887, 8 months ago

நோயியல் (Epidemiology) வரையறு.

Answers

Answered by anjalin
0

நோய்ப் பரவல் இயல் அல்லது நோயியல் (Epidemiology) எனப்படுவது எந்த ஒரு தொகுதியிலும் எப்படி, எங்கு, எக்காரணங்களால் ஒரு நோய் பரவும் என்று முறைப்படி அறியும் ஓர் இயல் ஆகும்.

விளக்கம்:

  • அறிவான முறைப்படி இதன் அடிப்படையில் நோய் கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும், வரும்முன் காப்பதற்கும் வழிகள் அமைக்க இயலுகின்றது. இது நிகழ் சாட்சிகளின் அடிப்படையில் நிறுவும் மருத்துவ முறைகளுக்கு இன்றியமையாதது.
  • நோய்ப் பரவல் இயலாளர்கள் கொள்ளைநோய் (மிக விரைந்து திடீர் என்று பரவும் காலரா போன்ற கொடிய நோய்) தோன்றி பரவுவதற்கும், தொற்றுநோய் பரவலுக்கும், தொற்று இல்லா நோய்களின் வளர்ச்சிக்கும் தேவையான அடிப்படையான செய்திகளை, முறைப்படி தேர்ந்து தொகுத்து, ஆய்வார்கள்.
  • இந்த ஆய்வாளர்கள் அணியில், புள்ளியியல், உயிரியல், உயிர்வேதியல் துறை அறிஞர்கள் இருக்ககூடும்.

Similar questions