காமராஜரின் வாழ்க்கை வரலாறு essay
Answers
Answer:
பெருந்தலைவர் என்று தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். இவர் ஏழை எளிய மக்களுக்காக ஆற்றிய பணிகள் அதிகம். இவர் முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு அது பொற்காலமாக இருந்தது. அந்த அளவிற்கு அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அவரை தனது உதவிகளை அவரது திட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். அந்த ஒப்பற்ற வள்ளல் குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக காணஉள்ளோம். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவினை வாசிக்கவும்.
காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவர் பிறந்ததும் இவரது தந்தை அவர்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த பிள்ளை என்பதனால் அவருடைய குலதெய்வமான “காமாட்சி” என்று பெயர் சூட்டினார்.
அவரது அம்மா அவரை ஆசையாக ராஜா என்று அழைப்பார்கள். இந்த பெயரே நாளடைவில் மருவி காமராஜர் என்றானது.
தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பயின்றார். காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோருடனும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களை தன்னுள் வைத்திருந்தார்.
இருப்பினும் அவரால் தொடந்து படிக்கமுடியவில்லை. அதன் காரணம் யாதெனில் அவரது பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்து விட்டார் . இதன் காரணமாக அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.