essay about friends in tamil?
if u don't know the language pls don't answer.........
Answers
Answer:
நட்பு...
இந்த உலகமே நட்பு என்னும் நூலில் தான் கட்டப்பட்டுள்ளது எனலாம். பெற்றோரிடம், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில விசயங்களை நண்பர்களிடம், தோழிகளிடம் கொட்டித் தீர்க்கலாம்.
சுயநலம் இல்லாதது...
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை எனலாம். அப்படியான நட்பை தனி அதிகாரம் போட்டு திருவள்ளுவரும் கொண்டாடியுள்ளார்.
பேதமே கிடையாது...
உறவினர்கள் இல்லாமல் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியும். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். பொருளாதாரம், ஏற்றத்தாழ்வு, வயது, ஆண் பெண் பேதம் என எதுவும் நட்பிற்கு கிடையாது.
ஞாபகங்கள் தாலாட்டும்...
காலத்தின் ஓட்டத்தில் புதிய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், பழைய ஆருயிர் நண்பர்கள் எப்பவுமே ஸ்பெஷல் தான். அப்படிப்பட்டவர்களையும், அந்த வசந்தகாலங்களையும் நெஞ்சில் அசைபோட இந்த நண்பர்கள் தினம் உதவுகிறது என்றால் மிகையில்லை.
if u want more ask me
9822107840
- ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருக்கும். நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன?
- உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.
நண்பர்கள் தின வரலாறு..!
- இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நம் இலக்கியங்கள் சொல்லித் தந்த நட்பின் இலக்கணம்..!
- சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாற்றை நாம் மறக்கமுடியுமா..?
- கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்திய செய்தி கேட்டு, பிசிராந்தையாரும் தன் நண்பரின் பக்கத்திலேயே வடக்கிருந்து மரணமெய்திய நிகழ்ச்சியை போல் நட்பை உயர்வு செய்யும் வேறு நிகழ்ச்சியை சொல்ல முடியுமா..?
- அதே போல் சங்ககாலத்தில், வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் தன் நண்பரான அவ்வைக்கு கொடுத்தானே அதியமான்... இதையும் நாம் மறக்கமுடியுமா..? அதேப்போல், ''நட்பு'' என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை தந்திருக்கிறாரே திருவள்ளுவன்... இதையும் நாம் மறக்கமுடியுமா...?
நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை..!
- நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம். நட்பு தினத்தை கொண்டாடுவதிலும் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர். அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
- உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.